உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 19.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




புல்* (விரும்பற் கருத்துவேர்)

89

பெள்- பெட்டை = 1. பெண். 2. சில விலங்கு புட்களின் பெண்பால்.

“ஒட்டகங் குதிரை கழுதை மரையிவை

பெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய” (தொல். மரபு. 53)

"புள்ளும் உரிய அப்பெயர்க் கென்ப”

(தொல். மரபு. 54)

ம., தெ. பெட்ட.

பெட்டையன் = 1. ஆண்மையற்றவன். 2. பேடி. பெட்டைச்சி என்பது இரட்டைப் பெண்பாலான உலக வழக்கு. பெட்டை மருட்டு பெண்டிரை அல்லது பேதையரை அச்சுறுத்தி ஏமாற்றுகை.

பெட்டைச் சிறுக்கி என்னும் வயவுச்சொல் இழிவழக்கு. சிறுமியரைப் பெட்டைப் பசன்கள் என்பது கொச்சை வழக்கு (வ.ஆ.). பையன்- பயன்- பசன்.

பெட்டை. பெடை = பறவைகளின் பெண்பால்.

=

“பேடையும் பெடையும் நாடின் ஒன்றும்”

"செந்தலை யன்றில் இறவி னன்ன

கொடுவாய்ப் பெடையொடு"

(தொல். மரபு. 55).

(குறுந். 160)

ம். பெட, க. ஹேட்டே. பெடை - பேடை = பெண்பறவை.

“மாத ரிருங்குயின் மணிநிறப் பேடை”

ம். பேட, க.ஹேட்டே.

பேடை

(பெருங்.1:33:29)

பேடு = 1. பெண்பால். "பேடலி யாணர் போலும்” (தேவா. 249: 1). 2. பெண் பறவை. “பேடுஞ் சேவலும்” (மலைபடு. 141, உரை). 3. சில விலங்குகளின் பெண். “தெய்வமாக வைத்த எருமையாகிய பேட்டின் கொம்போடே” (கலித். 114, உரை). 4. பேடனுக்கும் பேடிக்கும் பொதுப்பெயர். 5. பேடி. 6. கூத்துப் பதினொன்றனுள் ஒன்றான பேடிக் கூத்து. அது,

“சுரியற் றாடி மருள்படு பூங்குழற்

பவளச் செவ்வாய்த் தவள வாணகை

யொள்ளரி நெடுங்கண் வெள்ளிவெண் டோட்டுக் கருங்கொடிப் புருவத்து மருங்குவளை பிறைநுதற்

காந்தளஞ் செங்கை யேந்திள வனமுலை

யகன்ற வல்கு லந்நுண் மருங்கு

லிகந்த வட்டுடை யெழுதுவரிக் கோலத்து”(மணிமே. 3 :116 – 22)