120
வேர்ச்சொற் கட்டுரைகள்
பண்- பண்ணல் = 1. வயலைத் திருத்துதல். 2. பயிர் செய்தல். “பண்ணிய பயிரில் புண்ணியந் தெரியும்” (பழ.). 3. வேலை செய்தல். 4. செவ்வையா யமைத்தல். 5. அழகுபடுத்துதல். 6. அணியமாக்குதல் (ஆயத்தஞ் செய்தல்). 7. இசையெழுவும் எண்வகையுள் ஒன்று. “பண்ணல்...... எண்வகையாலிசையெழீஇ” (சிலப். 7:5-8).
பண்- பண்ணு. பண்ணுதல் = 1. பயிர் செய்தல். 2. வேலை செய்தல். 3. செய்தல் “உம்பர்க் கிடந்துண்ணப் பண்ணப்படும்" (நாலடி. 37). 4. செவ்வைப்படுத்துதல். 5. அழகுபடுத்துதல். “பட்டமொ டிலங்கப் பண்ணி” (சூளா. கல்யா. 14). 6. அணியமாக்குதல். “பூநுதல் யானையொடு புனைதேர் பண்ணவும்” (புறம். 12). 7. யாழ் நரம்பில் அலகு (சுருதி) அமைத்தல். 8. பண்ணிற்கேற்ப யாழ் நரம்பமைத்தல். “மருதம் பண்ணிய கருங்கோட்டுச் சீறியாழ்” (மலைபடு. 534). 9. சமைத்தல். "பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவிர்” (மலைபடு. 417). 10. உண்டாக்குதல். பானை சட்டி பண்ணுகிறவன் குயவன். (உ.வ.).
6
மாந்தன் முதன்முதற் கற்றுக்கொண்ட கைத்தொழில் உணவு விளைக்கும் பயிர்த்தொழிலாதலால் பண்ணுதல் என்னும் பண்ணை வினையைக் குறித்த சொல்லே பொதுவினையைக் குறிக்குஞ்
சொல்லாயிற்று.
ஒ. நோ : கை = கைத்தொழில், பயிர்த்தொழில்.
"இரவார் இரப்பார்க்கொன் றீவர் கரவாது கைசெய்தூண் மாலை யவர்”
(குறள்.1035)
பண் - பணி = 1. கைத்தொழில். பணிக்களரி = தொழிற்சாலை, பட்டறை, "கொல்லனது பணிக்களரியாகிய குறிய கொட்டிலிடத் தனவாயின” (புறம். 95, உரை). 2. அழகு பண்ணும் அணிகலம் (பிங்.). “பணியெலாம் பணிய தாகி” (கந்தபு. ததீசியுத். 106). 3. வேலைப்பாடு. “பணிபழுத் தமைந்த பூண்” (கம்பரா. இலங்கை கே. 12). 4. பிழைப்புத் தொழில்.
=
பொற்கொல்லர். "பணித்தட்டார்
ம. பணி. பணித்தட்டார் பணிபண்ணுமிடங்களில்” (சிலப். 6 : 135, உரை).
பணி- பணிக்கு = வினைத்திறமை.
பணிக்குச் செலுத்துதல்
=
வேலையாள்களின் வேலையை
மேற்பார்ப்பவன் (W.).
பணிக்குச் சொல்லுதல் = வேலை செய்யும் முறையைக் காட்டுதல் (W.). 2. பிறர் வேலையிற் குற்றங்கூறுதல். கட்டத் தெரியாவிட்டாலும்