புல்® (துளைத்தற் கருத்துவேர்)
127
55). ஒ.நோ: “வானின் றமையா தொழுக்கு” (குறள். 20). 2. சிறுநீர் ஒழுகவிடுதல். மோத்திரம் பெய்தான் (உ.வ.). 3. வார்த்தல். “பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்” (புறம். 115). நெய் பெய்த சோறு (உ.வ.). 4. கலத்தில் இடுதல். “உலைப்பெய் தடுவது போலுந்துயர்” (நாலடி. 114). 5. கீழிடுதல், “பார்த்துழிப் பெய்யிலென்” (நாலடி. 26). 6. இடைச் செருகுதல். இடையிடையே சில சொற்களைப் பெய்து (உ.வ.). 7. ஈதல். ‘‘உயிர்க்கு.... வீடுபே றாக்கம் பெய்தானை' (தேவா. 975 : 7). 8. அமைத்தல். “பிரான் பெய்த காவு கண்டீர்.... மூவுலகே” (திவ். திருவாய். 6:3:5).9.இட்டுப் பரப்புதல். தருமணல் தாழப் பெய்து" (கலித். 114). 10. நீர்க்குள் இடுதல். “கரும்தலை யடுக்கலி னணைகள்... பெருங் கடலிடைப் பெய்து” (கம்பரா. கும்ப. 248). 11. அணிதல். “மைந்தர் தண்டார் மகளிர் பெய்யவும்” (பரிபா. 20 : 21). 12. செறித்தல். "பெய்ம்மணி யேய தேர்” (கம்பரா. நாகபாச. 128). 13. கட்டுதல். “புணர்நார்ப் பெய்த புனைவின் கண்ணி” (பெரும்பாண். 218). 14. கையாளுந் திறம். “பெய்திற னெல்லாம் பெய்து பேசினேன்” (கம்பரா. கும்ப. 169).
(
ம. பெய்யுக.
பெய் - பெயர் = 1. இடுங்குறிச் சொல். பெயரிடுதல் என்னும் வழக்கை நோக்குக. “மறவர்பெயரும் பீடும் எழுதி” (அகம். 67). 2. புகழ். 'பெரும்பெயர் மீளி" (கலித். 17). 3. ஆள் எத்தனை பெயர் இங்கு வேலை செய்கிறார்கள்? (உ.வ.). 4. தலைக்கீடு (வியாஜம்). "திருவிழா வென்பதோர் பெயரால்” (காஞ்சிப்பு. நகர. 70).
பெயருக்கு = ஒப்பிற்கு. கடமை யுணர்ச்சியின்றிப் பெயருக்கு வேலை செய்கிறான் (உ.வ.).
ம. பெயர், தெ. பேரு, க. பெசர், து. புதேரு.
பெயர்- பெயரன் = (முதற் காலத்திற் பாட்டன் பெயரைப் பெற்று வந்த) மகன் மகன்.
பெயரன்- பெயர்த்தி (பெ. பா.).
பெயர்- பேர்= 1. பெயர்க் குறியீடு. "பேரும் பிறிதாகித் தீர்த்தமாம்” (நாலடி. 175). 2. ஆள். “அயற்பேரைக் காய்தி” (கம்பரா. சரபங். 30). 3. உயிரி (பிராணி). “விசும்பிற் செல்வதோர் பேர் செலாது” (கம்பரா. நாகபா. 156). 4. புகழ். "பேர்பரந்த பிரமாபுரம் மேவிய” (தேவா. 62 : 3). 5. தலைக்கீடு. "ரக்ஷிக்கைக்க ஒரு பேர் காணும் வேண்டுவது” (ஈடு, 9:3: 1). 6. ஒப்பு. பேருக்கு வேலை செய்கிறான் (உ.வ.).
ம. பேர். தெ. பேரு.