உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

கண் :

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

போன்ற வயிற்றின் அழகு, முழுநிறை மையலை முகத்தில் கூட்டி ஏக்கத்தால் நோக்கும் நோக்கு, உடை நெகிழ்ந்து சரிவதும் உணராமல் தன்னை மறந்து நிற்கும் நிலை! முனிவர்க்கு வாய்த்த பேதை மனைவிக்கா இப்போதை ஏறிவிட்டது?

அங்கே பார்த்தால், முனிவர் மோகினி முன்னே பித்தராய்க் காணுகிறார். இங்கே பார்த்தால், முனிவர் மனையாட்டி பிச்சைப் பெருமானுக்குப் பிச்சியாகி நிற்கிறாள். அழகு தான்! முன்னே கூறிய கலை முரண்கள் கழிபேரின்பம் சேர்க்கின்றன.

பொன் : கடந்தை முதலியார் இக் கலை மாளிகையைக் கருதிக் கருதிப் படைத்திருக்க வேண்டும். எத்தனை நாள்கள் உறக்கத்தை இழந்து ஊன்றி நின்று ஒரு முடிவுக்கு வந்தாரோ? அவர் கருத்தில் வடித்து முடித்த முடிவு, சிற்பியின் கையில் விளையாடிக் காட்சி வழங்கிக் கொண்டிருக்கிறது. இச் சிற்பங்களில் பொதிந்துள்ள கதை உனக்குப் புரிகின்றதா?

கண்

பொன்

கண்

ஆம்! எனக்கு ஓரளவு புரிகின்றது. தாருகவனத்து முனிவர்களின் மனைவியர் செருக்கை அடக்குவதற்கு இறைவன் பிச்சைப் பெருமான் கோலத்தில் வந்தான். அவர்கள் தங்கள் நிலையை மறந்து பெருமான் திருவழகில் மையலுற்றுச் சிலைபோல நின்றனர். ஆங்கு வந்த திருமாலாம் மோகினியைக் கண்டு முனிவர்கள் மயங்கித் திக்குமுக்காடினர். இந்தக் கதை தானே?
ஆம், இக் கதை தான் இதில் பொதிந்துள்ள கருத்துப் புலப்படுகின்றதா?
ஏதோ காரணம் இருக்கவேண்டும் என நினைக் கின்றேன். ஆனால் எனக்குப் புலப்படவில்லை. நீ சொல்.

பொன் : சொல்கின்றேன்.வாழ்க்கையில் செருக்குக் கூடாது. அறிவிலே ஆகட்டும்; ஒழுக்க நெறியிலே ஆகட்டும்; செருக்குக் கூடாது. செருக்கு ஆகிய ஆணவம் பெருகிய இடத்தில், தன்னெடுப்புத் தோன்றும்; பிறரை யெல்லாம் தாழ்வாகப் பார்க்க வைக்கும்; அப்பார்வை ஆணவப் பார்வை ஆகுமே அன்றி அருட்பார்வை