உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

25

என்று

ஆகாது. குறைவிலா நிறைவுடையோம் தம்மைக் கருதிக்கொள்பவர் பிறரிடத்துக் குறைகண்டு எள்ளி இகழ்ந்து நகைப்பரே அன்றி, இளகி இரங்கிக் கைதூக்கி விடத் துணியார். ஆதலால் நல்வழிகளிலே ஆயினும் செருக்கு உண்டாதல் சிறுமையானதே. அறிவால் செருக்கிய முனிவர்களுக்கும், ஒழுக்கத்தால் செருக்கிய முனிவர்களின் மனைவியர்க்கும் ஒரே பொழுதில் நன்னெறி காட்ட வந்த கோலமே பெருமானின் பிச்சைக் கோலமும், பெருமானின் மோகினிக் கோலமுமாம்! 'கலையுரைத்த கற்பனையே நிலையென்று' போகிவிட்டமையால் இஃது எள்ளி நகைக்கும் கதையாகவும் ஆயிற்று. இதன் உண்மையை உணர்ந்தால் வாழ்வின் மேலானதோர் அடிப்படை உள்ளே பொதிந்திருக்கக் கண்டு மகிழலாம்.

இந்த உணர்வு இல்லாமல் சிற்பத்தின் அழகை மட்டும் பார்த்துப் பரவசப்படுவதால் ஆவதென்ன? சிற்ப அழகு புற அழகுதானே! அதன் அக அழகையும் ஊடுருவிப் பார்க்கும் போது தான் உண்மைப் பொருள் புரிகின்றது. மிக அரிய செய்தி இது. சிவப்பிரகாச அடிகள் பாடிய பிட்சாடன நவமணி மாலையில்,

‘நங்குற்றம் தீர்க்கும் பழமலை நாதர்க்கு நற்பலிகொண்டு அங்குற்று மென்துகில் போக்கினள் வெற்றரை யாகியந்தோ இங்குற் றனையென எம்பெரு மானிவ் விருநிலத்தில் தங்குற்றம் பார்க்கு மவருள ரோவெனத் தாழ்ந்தனளே'

க்

என்று பாடியுள்ளதை நினைத்துக்கொண்டு, இக் காட்சிக் கூடத்தைப் பார்த்தால் பேரின்பமாம். பொன் : ஆம்! அருமையாகக் கூறினாய். நான் 'நடக்குமோர் சுவடிச் சாலையுடன்' வந்துள்ளேன் என்பதை நினைத்தால் அதுவும் பேரின்பமாகத்தான் உள்ளது.

கண்

பாராட்டு இருக்கட்டும். தென்பால் இருந்து அருள் சுரக்கும் வேழமுகத்து வேந்தரையும் வடபால் இருந்து அருள் பெருக்கும் மயிலேறும் மாணிக்கத்தையும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு அடுத்த பகுதிக்குப் போகலாம். பொன் : என்ன? இப்பொழுது நீயே வழிகாட்டத் தொடங்கி விட்டாயா? எனக்கு இனிக் கவலை இல்லை.