உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31

ஒன்றைக் கேட்கவேண்டும். இதற்கு 'இருட்டு மண்டபம்' என்பது ஒருபெயர் என்றாயே, இது நல்ல வெளிச்சமாகத்தானே உள்ளது?

பொன் : முன்னே இம் மண்டபம் இருட்டாக இருந்தமையால் தான் அவ்வாறு அழைத்தனர். ஆனால், 1960 இல் திரு. பொன்னம்பலம் தியாகராசன் (பி.டி. இராசன்) அவர்களால் இக் கோயிலில் திருப்பணி செய்யப் பட்டது. அப்பொழுது இதன் வடபக்கச் சுவரை இடித்து ஒளியும் காற்றும் புகும் வகையில் சாளரங்கள் வைக்கப்பட்டன. ஆதலால் இப் பொழுது அப் பெயர்க் காரணம் மறைந்து போயிற்று. "புன்மை இருள் போயது; பொற்சுடர் புகுந்தது" என்றால் நலந்தானே! இனிப், பொற்றாமரைக் குளத்தைப் பார்க்கலாம்.