உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

6. பொற்றாமரைக் குளம்

து

பொற்றாமரைக்குளமா! அப்பா! எத்தனை அழகான காட்சி என்ன அழகு! என்ன அழகு! இப்பொழுது தான் புரிகின்றது. எத்தனை படங்களில் இதனைப் பார்த்திருக்கின்றேன். இதனைப் பார்க்காமலே இது மதுரைப் பொற்றாமரைக் குளம் என்பதைப் பள்ளிப் பிள்ளைகளும் அறிந்துகொள்கிறார்கள். நான் இப் பொழுது தான் தான் நேரில் நேரில் பார்க்கக் கொடுத்து வைத்திருக்கின்றேன், பொன்னப்பா.

பொன் : என்னப்பா!

கண்

கொஞ்சம் உட்கார். என்ன அழகான தோற்றம்! என்ன இனிமையான காற்று! "மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே, மென்காற்றில் விளைசுகமே, சுகத்தில் உறும் பயனே - வள்ளலார் எப்படி அனுப வித்துப் பாடியிருக்கிறார். உட்காரேன்! நிற்கின்றாய்?

ஏன்

பொன் : உன் திருவுளப்பாங்கின்படியே உட்கார்கின்றேன். இனி என்ன செய்ய வேண்டும்?

கண்

ஒன்றும் செய்ய வேண்டா, நான் ஆசைதீரப் பார்த்துக் கொள்கின்றேன். பிறகு பேசலாரி; நம் ஊரிலும் குளம் உண்டு; படிக்கட்டு உண்டு; அலை மோதித் தாவும் அளவு நீருமுண்டு; ஆனால் இந்த அழகுக் காட்சியைக் காணமுடியவில்லையே!

பொன் : ஏன் அழகு இல்லை? அதுவும் அழகுதான். உனக்கு அது பழகிப் போய்விட்டது. இன்று இதனைப் புதிதாகப் பார்க்கின்றாய். அதனால் வியப்பாக உள்ளது.

கண்

இன்று புதிதாகப் பார்ப்பது உண்மைதான். வியப்பாக இருப்பதும் உண்மைதான்; என்னையும், உன்னையும் போலவே இங்கே உள்ளவர்கள் எல்லாரும்