உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

ஒளிமிக்க விமானம் ஒன்று விண்ணுலகில் இருந்து இறங்குவதைக் கண்டு வியந்தான். அதில் இருந்தவர் ஓர் இலிங்கப் பெருமானைக் கொண்டு வந்து இரவெல்லாம் வழிபாடு செய்தனர். விடிந்த போது இலிங்கத்தை மட்டும் விட்டுவிட்டு அவர்கள் விண்ணுலகு சேர்ந்தனர். இக்காட்சியைக் கண்ட தனஞ்செயன் பேரன்போடு வழிபாடு செய்தது மட்டுமல்லாமல் தன்னாட்டு வேந்தனுக்கும் தான் கண்ட காட்சியைக் கூறினான். அன்று இரவில் இறைவனும் வேந்தன் கனவில் காட்சி வழங்கினான். பாண்டியன் குலசேகரன் வியப்புற்றுக் கடம்ப வனத்தை அழித்து சிவலிங்கப் பெருமானைக் கண்ட இடத்தில் கோயில் எழுப்பினான். அவ் வினிய

டத்திற்கு மதுரை எனப் பெயர் சூட்டினான். இக் கதை திருவிளையாடல் திருநகரங் கண்ட படலத்தில் கண்டது! என்னைப் பாரேன்; உனக்குத் தெரியாது என்பது போல உளறிக் கொண்டிருந்தேனே! இந்தக் கதை என்று சொல்லியிருந்தால் போதுமே!

அதனால் என்ன? தெரிந்ததைக் கூறினால் மேலும் தெளிவுதானே! குற்றமில்லையே! அந்தக் குலசேகர பாண்டியனும், வணிகன் தனஞ்செயனும்தாம் இவரா? "வேந்தர் பெருமானே, வாணிகச் செல்வனே, உங்கள் இருவர் நற்பணியால்தான் நாங்கள் இங்கே வந்து அம்மையப்பரைக் கண்டு வணங்கிப் பிறவிப் பயனை அடையப் போகின்றோம்' என்று வழிபட வருவார் ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்து போற்றும் வகையில் இவ்விடத்தே இவர்கள் சிலைகளை நிறுத்தி வைத் துள்ளமை குறிப்பிடத்தக்கது அல்லவா!

பொன் : இத் தூண்களைப் பார். இவ் வழிநடைக்கு மேற்கே பன்னிரண்டு தூண்கள்; கிழக்கே பன்னிரண்டு தூண்கள். இந்த இருபத்து நான்கு தூண்களிலும் ஏடும் எழுத்தாணியும் பிடித்துள்ள திருவுருவங் களைக் காண்கின்றாயே, இவர்கள் சங்கப் புலவர்கள். : பொற்றாமரைக் குளத்தில் மிதந்த சங்கப் பலகையில் இருந்து, இவர்கள் தமிழாராய்ந்தார்கள் என்ற கதை உள்ளமையால், இக் குளக் கரையிலேயே அவர் சிலைகளை எழுப்பியுள்ளார்கள் போலும். ஆனால், அவர்கள் 49 பேர்கள் அல்லரோ!

கண்