உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

31 ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

தமிழில் 'ய' எனக் குறிக்கப்படும். இது 'சிவயநம என்பதில் இடைநின்ற எழுத்து. 'ய' என்பது 'ஆன்மா' வைக் குறிக்கும். அஃதாவது தன்னைத் தான் அறியாமை! இனி இறைவன் மூர்த்தங்கள் எட்டு எனக் கண்டோமே; மண் விண் தீ நீர் காற்று மனம் அறிவு ஆணவம் என்பன; இவ்வெட்டு வடிவுடன் அம்மை யப்பனாம் இருவடிவம் அறியாதவன்!

பொன் : இப்பொழுது என்னை நீ அறிய வைத்தாயா? நான் உன்னை அறிய வைத்தேனா?

கண்

இருவரும் அவன் அருளாலே அவன் அறிவிப்பை அறிந்தோம்.

பொன் : மகிழ்ச்சி; என்ன மேலே பார்க்கிறாய்?

கண் : இதோ நால்வர் உருவம்; எட்டும் இரண்டும் அறிந்தவர்கள் இவர்கள்! பிறர்க்கு அறிவித்தவர்களும் இவர்கள். இவர்களை இவ்விடத்தில் இருந்து நினைக்க வைத்த வண்ணம் எவ்வளவு சிறந்தது! 'இம் மையத்தில் நின்றுபார்' என்று பார்க்க ஏவி, அதற்குரிய அடையாளத்தைப் பாவு கல்லில் பொறித்துள்ளார் கற்றச்சர். இவ்விடத்தில் இருந்து முன்னேறி மேற்கே எட்டு வைக்க எட்டு வைக்க 'எட்டும் இரண்டும்' ஒன்றொன்றாய்த் தெரிய வைத்த தேர்ச்சி, ஆன்மா கடைத்தேறும் அருமையை வெளிப்படுத்தியது அல்லவா!

பொன்

கண்

நல்லது கண்ணப்பா, கைசெய் வண்ணத்தால் காட்சியளிக்கும் இந் நால்வர்களைப் பார்க்கும் இதே வேளையில் செய்கை வண்ணத்தால் சிறப்படைந்த நால்வர்கள் என் நினைவில் தோன்றுகின்றனர்.
அந்த நால்வர் எவர்?

பொன் : 49.5 மீட்டர் நீளமும் 36 மீட்டர் அகலமும் உடைய இப் பொற்றாமரைக் குளத்தைச் சுற்றிலும் நடைவழி மண்டபங்கள் உள்ளனவே! இவற்றைக் கட்டுவித்த கொடையாளர்கள்தாம் அவர்கள்! * இதன் வடக்குப் புற மண்டபமும் படிக்கட்டுகளும் கி.பி. 1562 இல்

கோயில் மாநகர் பக். 156 -7.