உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

என்னப்பா வேடிக்கை! ஆலமரம் எப்படி இருக்கும் என்றானாம் ஒருவன் அவன், "ஆலமரம் தெரியாதா? வேலியிலே புளியமரம் மாதிரி முள்ளுமுள்ளாகப் படர்ந்திருக்கும் என்றானாம். அவனுக்கு ஆலமரம் தெரியாது; வேலி தெரியாது; புளிய மரம் தெரியாது; முள்ளும் தெரியாது; படர்தலும் தெரியாது. இது போல் இவன் குமரகுருபரரைத் தெரிந்தானா? திருவள்ளுவரைத் தெரிந்தானா? திருக்குறளைத் தெரிந்தானா? நல்லவேளை அந்த வெள்ளைக் காரனிடம் னிடம் "திருக்குறள் சேக்சுபியர் எழுதியது என்று சொல்லாமல் விட்டானே!

பொன்: இங்கே பார்! இது திருநீற்றுப் பிள்ளையார்.

கண்

பார்த்தாலே புரிகிறதே! இதற்கு வழிபாடே திருநீறுதானா?

பொன் : நீரிலே குளிக்க விரும்பும் யானை இங்கே திருநீற்றிலே குளிக்கின்றது.

கண்

என்ன அருமையான படைப்பு!

பொன் : எதைச் சொல்கிறாய்?

கண் : குமரகுருபரர் இங்குத்தானே மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ் பாடினார்?

பொன் : ஆம். ஆனால் அதனை அரங்கேற்றிய இடம் கோயிலின் : உள்ளே இருக்கின்றது.

கண்

இருக்கட்டும். அதன் கடவுள் வாழ்த்தில் இந்தப் பிள்ளையாரைத்தான் குறிப்பிட்டிருக்கின்றார் என்பது எனக்குத் தெளிவாகப் புலப்படுகின்றது.

பொன் : ஏன்?

கண்

அவர், பிள்ளையாரை அயிராவணம் என்னும் வெள்ளை யானைக்கு ஒப்பிட்டு, வெண் பொடியில் புழுதி விளையாட்டு விளையாடுவதைக் கூறுகின்றார். திருநீற்றில் முழுகிக் கிடக்கும் இப் பிள்ளையார் அயிராவணத்திற்கு மிகப் பொருத்தமான உவமை

தானே!