உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

31ஓ

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

பாடும் பாவையாய் வணங்குபவர்; குரங்கராய், காளை யராய் வணங்குபவர்; இப்படி எத்தனை எத்தனை தோற்றங்கள், எப்படி வழிபட்டால் என்ன! உருக்கம் தானே உண்மை வழிபாடு. அவ்வுருக்கத்தை உளியில் விளையாட விட்டு உருகி நின்றிருக்கிறான் சிற்பி. அவன் உள்ளம் இத்தனை வகைகளிலும் வழிபட்டு பேரா இன்பம் பெற்றிருக்கின்றது.

கண் : “பொன் செய்த மாடமலி கூடல் பெருஞ்செல்வி பொன்னூசல் ஆடியருளே!

புழுகுநெய்ச் சொக்கர்திரு வழகினுக்கு ஒத்தகொடி பொன்னூசல் ஆடியருளே!'

என்று நாமும் அம்மைக்கு ஊஞ்சலாட்டுப் பாடி அடுத்த மண்டபத்திற்குச் செல்லலாம்.