உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. சொக்கர் திருமுன்

பொன் : இது சொக்கர் கோயில் இரண்டாம் திருச்சுற்றாகும். இதன் வெளிப்புறச் சுற்றுச் சுவர் 'சுந்தரபாண்டியன் மதில்' என்று வழங்கப்படுகின்றது. இதனைக் கட்டியவன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 1238) இதன் உட்சுற்றுச் சுவர் 'கபாலி மதில்' எனப்படும்.

கண்

ஓ! ஓ! "கபாலிநீள் கடிம்மதில் கூடல் ஆலவாயிலாய் என்று ஞானசம்பந்தர் பாடுகின்றாரே!

பொன் : ஆம். அந்த மதில்தான்! இது ஞானசம்பந்தர் காலத் திற்கு முற்பட்ட பழைமையுடையது என்பது புலப்படும்! இந்த மண்டபத்தைப் பார்; இதற்குக் 'கம்பத்தடி மண்டபம்' என்பது பெயர். 'நந்திமண்டபம்’ என்றும் கூறுவர்.

கண்

சரிதான். மண்டபத்தின் நடுவே தங்கக் கொடிமரம் பளிச்சிடுகின்றது. நந்தியும் பலி பீடமும் அழகுக் காட்சி வழங்குகின்றன. பெயர் சரிதான்; ஆனால் இவ்விடத்தை விட்டுப் பெயர்வதற்கு மனமில்லை!

உட்கார்!

பொன் : தேன் அருந்த மாட்டாமல் தெய்வமலர் சிதைந்து மீனருந்தித் திரியும் நாரை! அப்படியே நம் வாழ்வும் கழிகின்றது. இத் தெய்வக்கலையைக் கண்டு களிப் புறாக் கண்ணும் கண்ணோ! எத்தகைய வியப்பான படைப்பு! வேலைப்பாடு!

கண்

அப்பா, பொன்னப்பா! ஒதுங்கி ஓரமாக அமர்ந்து ஒவ்வொரு தூணையும் பார்த்துப் பேசுவோம்!

பொன் : நல்லது. சொக்கர் திருவாயில் முன்னே தென்பால் நான்கு தூண்கள்; வடபால் நான்கு தூண்கள்; ஆக எட்டுத் தூண்களால் ஆகிய எழில் மண்டபம் இது!