உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

அறிந்துகொண்ட ஒருவனுக்கு மறதி வரலாம்; அது குற்றமில்லை; அறிந்துகொள்ள வேண்டியவனுக்கு மறதி வரலாமா?

பொன் : தங்கை மீனாட்சி திருமணத்தைக் காண அண்ணன் அழகர் வருகிறார். அவர் வருமுன்னரே திருமணம் முடிந்து விடுகிறது; அழகருக்குக் கோபம் வந்து விடுகிறது. வந்த வழியே திரும்புகிறார். சித்திரைத் திருவிழாக் காட்சி இது. ஆனால் இச் சிற்பக் காட்சி அப்படி யில்லையே! அழகர் நீர் வார்த்துத் தந்து, தங்கை திருமணத்தை முடித்து வைக்கிறாரே!

பொன் : மீனாட்சி திருமண ஓவியம், சுதை, சிற்பம், வரலாறு எல்லாமும் இப்படித்தான் காட்டுகின்றன. ஆனால், திருவிழாவில் மட்டும் திருப்பமாகிவிட்டது!

கண்

திருவிளையாடல் திருமணப் படலம் "மாயோன் கரகநீர் மாரி பெய்தான்' என்று கூறுகிறதே!

பொன் : ஆமாம்! இம் மண்டபம் கி.பி. 1564 இல் கிருட்டிண வீரப்ப நாயக்கரால் கட்டப்பெற்றது. ஆதலால் இக் காலத்திற்குப் பின்னர்த் தான் புதுக் காட்சி தொடங்கி யிருக்கலாம். திருமலைநாயக்கர் காலத்தில் மாசியில் நடந்த இப் பெருவிழா பயிர்த்தொழிலாளர் பருவ நிலை கருதிச் சித்திரைக்கு மாற்றி வைக்கப்பெற்றது. இது போலவே நிகழ்ச்சிகளும் மாறியிருக்க வாய்ப்பு உண்டு.

கண்

திருமணக் காட்சி சொக்கர் திருமுன்னிலையில் உள்ளதே? இதற்குக் காரணம் என்ன?

பொன்: அம்மை போர்க் கோலம் கொண்டு சென்றார். அப்போர்க் கோலமே மணக்கோலம் கொள்ளுதற்குக் காரணமாயிற்று. அஃது இறைவன் திருமுன்னிலையில் தானே நடந்தது. அன்றியும் இறைவியை இறைவன் வெற்றி கொண்டதால் தானே திருமணம் நிகழ்ந்தது. ஆதலால் இறைவன் வீரச் செயல்களை யெல்லாம் ஒருங்கே விளக்கிக் காட்டும் இவ்விடத்தில் இச் சிற்பமும் வைக்கப் பெற்றது.

கண்

"குன்ற விலாளியை வென்ற தடாதகை" என்கிறாரே குமரகுருபரர்?