உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

63

என்னும் கல்லாடர் வாக்கால் கண்ணுதல் பெருமானை நினைவோம்.

பொன் : இந்த இரண்டாம் தூண் இறைவன், காலனை அழித்த காட்சியை விளக்குகிறது. காலன் கழுத்தில் இறைவன் கால்விரல் என்ன அழுத்து அழுத்துகிறது! சரியாகச் சங்கைத் தேர்ந்தெடுத்து மிதிக்கிறான். காலன் கால்களில் ஒன்று கீழே கிடக்கிறது. மற்றொன்று மடிந்து மேலே கிடக்கிறது.

கண்

இங்கே பார்; தூணின் கிழக்குப் பக்கத்தில் உள்ள சிவலிங்கத்தின்மேல் கயிறு கிடக்கிறது. காலன் மார்க்கண்டனுக்கு வீசிய கயிறு இது. மார்க்கண்டன் இலிங்கப் பெருமானைக் கட்டிப் பிடித்து இறுக்கிக் கிடக்கிறான். காலனைக் காலால் மிதித்துக் காலகாலனாகக் காட்சி வழங்குகிறான் இறைவன். : இக் காட்சியை சேக்கிழார்,

“வந்தடைந்த சிறுமறையோன் உயிர்மேல் சீறி வருங்காலன் பெருங்கால வலயம் போலும் செந்தறுகண் வெள்ளெயிற்றுக் கரிய கோலம் சிதைந்துருள உதைத்தருளும் செய்யதாளா”

என்று பாடுகிறார்.

பொன் : இவரைப் பார்! இவர் சுகாசனர்! இத் தூணின் உட்புறத்தில் அமர்ந்துள்ளார்.

கண்

இவரைப் பார்த்தாலே சுகாசனர் என்பது புரிகின்றது. சும்மா இருக்கும் சுகம் அரிது" என்றார் தாயுமானவர். இப்பொழுது பார்த்தால் 'சும்மா' பெருகிவிட்டது! பத்திரத்திலும் "சுகசீவனம்" என்று எழுதி உறுதிப் படுத்திக் கொள்கிறார்கள்! தாயுமானவர் சொன்ன சும்மா'வும் 'சுகமும்' நாணித்தலை குனியத்தான் வேண்டும்!

பொன் : படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழிலும் செய்யாமல் செய்து, தூங்காமல் தூங்கி-ஆடல் புரியும் அம்பலவன் இப்படிச் சுகா சனராக விளங்குவதும் இயற்கைதான்!