உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

இளங்குமரனார் தமிழ்வளம் - 31

பொன் : இத்தூணின் தென்பக்கம் ஆழியங்கையர் உள்ளார். (சக்கரதரர்) ஆழியங்கையர் (சக்கரதாரர், சக்கரதாரி) என்றதும் திருமாலே நினைவுக்கு வருவார். இவர் எப்படி ஆழியங்கையரானார், தெரிகிறதா?

கண்

: இவர் சிவபெருமான்தான். இவர் கையில் ஒளி செய்யும் ஆழி (சக்கரம்) உள்ளது. இதை ஒருவருக்கு அருள்கிறார்! ஆழியை வைத்திருப்பதால் இப்பெயர் இவர்க்குப் பொருந்தும் ஆனால் கதை புரியவில்லை. பொன் : சலந்திரன் என்பான் ஓர் அசுரன். அவன் இறைவன் அருளால் பெருவீரம் பெற்றான். அச் செருக்கால் இறைவனையே அழிக்க முற்பட்டான். போருக்கும் எழுந்தான். இறைவன் ஓர் அறுகம் புல்லை எடுத்து வளையமாகச் செய்து நிலத்தில் போட்டான். இதனை எடுக்கும் ஆற்றல் உண்டாயின் எடுக்க, என்று சலந்திரனிடம் இறைவன் கூறினான். செருக்குடைய சலந்திரன் புல்லென எண்ணி எடுத்து மேலே கழுத்தளவு தூக்கினான். அப்புல் ஆழிப்படையாகி அவன் கழுத்தை அறுத்துப் பின்னை இறைவன் கையைச் சேர்ந்தது. அப்படையைத் திருமால் முப்புரம் எரிக்க உதவிய நன்றியை நினைத்தும், தன் கண்ணை மலராகக் கொண்டு வழிபட்டதை நினைத்தும் பரிசாக வழங்கினார் என்பர். இதனைப் புல்லுக்கு மாறாக நிலத்தில் வட்டமாக இறைவன் கீறினார் என்றும் கதை கூறுவர்.

கண்

இப்பொழுது தெளிவாகிறது. இது திருவாசகத்தில் "சலமுடைய சலந்தரன்தன் உடல்தடிந்த நல்லாழி

நலமுடைய நாரணற்கன் றருளியவா றென்னேடி! நலமுடைய நாரணன்தன் நயனமிடந் தரனடிக்கீழ் அலராக இடஆழி அருளினன்காண் சாழலோ"

எனக் குறிக்கப்படுகிறது! இதில் கொடுப்பார்க்கும் பெறுவார்க்கும் உள்ள இன்பம் நன்றாக வெளிப் படுகிறது. இஃது ஈத்துவக்கும் இன்பமாகும்!

பொன் : இதே தூணின் வடக்குப் பக்கத்தில் மேற்கே உமை யொருபாகரும், கிழக்கே சங்கர நாராயணரும் உளர்.

காளமேகப் புலவர் "எருதாய்ச் சுமந்து" என்னும் தனிப்பாடல்.