உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

67

இருப்பதால் அரசே இதில் கருத்துச் செலுத்துதல் வேண்டும்.

பொன் : நல்ல கருத்துத்தான். நாம் வடக்கு வரிசையைப் பார்க்கலாம். இந்த மேல் பக்கத் தூணின் மேல் பக்கத்தில் ஓரடிப்பெருமான் (ஏகபாதமூர்த்தி)

கண்

உள்ளார்.

'செயற்கரிய செய்வார் பெரியர்' என்பர்; இவர் பெரியவர் தாம். ஒரு காலால் நிற்கவோ நடக்கவோ நம்மால் இயல்வது இல்லை. இவருக்கு எளிமையாக முடியும்! ஒற்றைக் காலிலே நிற்கிறான் என்னும் உலகவழக்கை நிலைநிறுத்திக் காட்டுகிறார் இவர்.

பொன் : பேருந்து வண்டியில் நின்றுகொண்டு வந்து ஒருவர் தள்ளாடும்போது, பேருந்து நடத்துநர் காலை அகற்றி வைத்து நில்லையா!" என்று சொல்ல வில்லையா! இரண்டு காலிருந்துமே தள்ளாடுகிறது! : "வழுக்கி வீழும்போதும் இவர் பெயரையே சொல்ல வேண்டும்" என்பது பெரியவர்கள் வேட்கை. இவ் வாறாக இவர் வழுக்கி விழுவாரா? தூணாக நிற்கிறார்! விழமாட்டார்!

கண்

பொன் : அடுத்து இருப்பவர் 'விடைஏறியார்' (ரிஷபாரூடர்) : விடை என்பது காளைதானே! காளையே எடுப்பாக நிற்கிறது.

கண்

பொன் : முப்புரங்களை அழிக்க இறைவன் போகும் போது தேவர்கள் செருக்குக் கொண்டனர். இதனை உணர்ந்த இறைவன் தேரை அழுத்தினான். தேர் ஒடிந்தது.தேவர்கள் திகைத்தனர்; "இனி இறைவர் எதன் மேல் போய் முப்புரத்தை அழிப்பார்" என்று நினைத்தனர். திருமால் காளையாகி வந்து இறைவனைத் தாங்கினார்.

கண்

சரி சரி! புரிகிறது.

“தடமதில்கள் அவைமூன்றும் தழலெரித்த அந்நாளில்

இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ"

என மாணிக்கவாசகர் பாடுகிறாரே அக்காட்சியா?