உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

இளங்குமரனார் தமிழ்வளம் 31 ஓ

பொன் : இவர் கயிலாயப் பெருமான் (கயிலாய ஆரூடர்). மலையிலேயிருந்து கொண்டுவந்த கல்லிலே மலையைத் தீட்டி மலையப்பரை மலையான் மகளோடு காட்டியுள்ளான் சிற்பி. நிலை எடுத்த நெடுநிலத்தில் மலையெடுக்க வல்லாளனாய்த் தலையெடுத்த இராவணனை மறவாமல் சிற்பி வடித்துள்ளான்!

கண்

ஞானசம்பந்தப் பிள்ளையாரின் எட்டாம் பாடலை யெல்லாம் தட்டிக் கொண்ட ராவணனாரை நினைந்து தட்டியிருக்கிறான் சிற்பி.

-

ம்

பொன்: தெற்கு வரிசை நான்கு தூண்களையும் ஒருவாறு பார்த்துவிட்டோம். இதற்கும் வடக்கு வரிசைத் தூண்களுக்கும் ஊடே - எட்டுக்கால் மண்டபத்துக்கு ஊடே உள்ள இந் நாலுகால் மண்டபத்தைப் பார். தங்கக்கொடி மரமும் நந்தியும் பீடமும் உள்ளன. இம் மண்டபத்தின் எப்பக்கமும் வேலைப்பாடே. பீடம், தூண், குழைவு, வளைவு ஆகியவற்றில் எல்லாம் அருமையான வேலைப்பாடு. முகடு, விட்டம்,சட்டம், தகடு, சங்கிலி, ஆணி இவை எல்லாம் அழகு வேலை. இந் நாலுகால் மண்டபத்தின் பாவுகல் ஒரே கல் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்

இஃது அல்லாவுதீன் விளக்கு வேலையா? உளி

வேலையா?

பொன் : இக் கலைத் தேர்ச்சியாளரை வழிவழியாகப் போற்றி யிருந்தால், அவர்கள் இத் தெய்வக்கலையை விடுத்து உடைகல், சல்லிக்கல் வேலையை வாழ்வாகக் கொண்டிருப்பரோ? வயிற்றை நானென்று காக்கும் ஆள் நாட்டில் இல்லை! “அவர்கள் நான் காக்காமல் தீராதே” எனக் கல்வேலையை நல்வேலையெனத் தேடி விட்டனர். அவர்களுள் எத்தனை எத்தனை அரிய சிற்பிகள் அடங்கிவிட்டனரோ? எவர் அறிவார்? : தெரியாமல் மறைந்து விட்டவர்களை என்ன செய்யலாம்? இப்பொழுதும் அவ்வழியினர் அங்கும் இங்குமாக இருக்கவே செய்கின்றனர். அவர்களை போற்றிக் காத்தால் இப் புகழ்க் கலையைக் காத்த பேறாவது தமிழகத்துக்கு நிலைக்கும்! அரசரும் வள்ளலும் இருந்த இடத்தில் இப்பொழுது அரசு

கண்