உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் 31

இங்குச் சிலையாக்கிச் சிறப்புக்கொண்ட செல்வர் முன்னே கூறிய கிருட்டிண வீரப்ப நாயக்கர்தாம். இனி இச் சுற்றின் வடமேற்கு மூலைக்குச் செல்வோம்!.... இது சங்கத்தார் கோயில்!

சங்கத்தார் கோயிலா?

பொன் : ஆம்! சங்கம் இருந்த மதுரையாயிற்றே! சங்கப்புலவர் களுக்காகவும் இறைவன் திருவிளையாடல் புரிந்த

கண்

டம் ஆயிற்றே! அதனால் அவர்களுக்குக் கோயில் எழுப்பியுள்ளார்கள்.

மகிழ்ச்சி! சங்கப்புலவர்கள் எவ்வளவு பழமையான வர்கள். இக்கோயில் புதிதாக உண்டாக்கப்பட்டதா? பொற்றாமரைக் குளத்து வடகரையின் நடைவழி மண்டபத்தின் தூண்களில் உள்ள இவர்கள், இங்கே கோயில் கொண்டும் இருப்பது மகிழ்ச்சிதான்.

பொன் : கண்ணப்பா, இக் கல்வெட்டைக் கருதிப் புதிதாக உண்டாக்கினார்களா என்று கேட்கிறாய் என

கண்

நினைக்கிறேன்.

"மதுரைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருமிகு டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் தலைமையில் தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் திறந்துவைக்கப் பெற்றது. தி.பி. 2005ரு, ஆவணி 26.

மதுரை”

என்று இருக்கிறதே!

து

14.9.1974

பொன் : இது பழைய கோயில்தான். ஆனால் கோயில் வாயி லையே மண்சுவர் வைத்து மறைத்து விட்டார்கள்.

கண் : என்ன சொல்கிறாய்?

பொன் : ஆம்! உனக்குத் திகைப்பாகத்தான் இருக்கும். மாலிக் காபூர் படையெடுப்பின் போது (கி.பி.1310) கருவறையில் இருந்த மூர்த்திகளை மறைத்து வைத்துப், பொற்படிவங் களையும், அணிகலங்களையும் எடுத்துக் கொண்டு நாஞ்சில் நாட்டுக் கிலுகிலுப்பைக் காட்டுக்கு ஓடிய செய்தி உண்டு. பின்னொருகால் மானவீரன் மதுரைக்கு மூர்த்திகளை எடுத்துச் சென்று சேதுபதிகள்