உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

87

அருகில் கிழக்குப்பார்த்த இத் தனிக்கோயிலில் இருப்பவர் சித்தர் பெருமான்.

உருட்டிய இவர் பார்வையே, பார்த்தவர்கள் அறிவை உருட்டிவிட்டு மயங்க வைக்கும்போல் உள்ளது. நாற்கை எண்கைகளுடன் இருந்தால் தம்மை இன்னார் என்று எவரும் எளிதில் அடையாளம் கண்டுகொள்வர் என்றுதான் இருகையராக உள்ளார் போலும்.

பொன் : வலுவமைந்த உடல்; அழகுமிக்க தோற்றம். தண்டின் மேல் ஒருகை! ஒருகையில் மந்திரக்கோல். வலக் காலைக் கீழேமடித்து இடக்காலை அதன்மேல் மடித்துப் போட்டுப் பீடத்தின்மேல் ஒய்யாரமாக அமர்ந்துள்ளார். மணக்கோலத்தில் இவர்க்கு இருந்த அணிகலன்கள் எல்லாம் பறிபோய் பறிபோய் விட்டன போலும்! நடிக்கும் பாத்திரத்திற்குத் தக்க உடையும் அணியும் ஒப்பனையும் வேண்டும் என்பது என்ன, கூத்தப் பிரானுக்குத் தெரியாதா? அவரை வடித்துக் காட்டுவதே வாழ்வாகக் கொண்ட கலை வல்லானுக்குத் தெரியாதா?

கண்

திருவிளையாடல் கூறும் 'கல்லானைக்குக் கரும் பருத்திய சித்தர்' இவர்தாமே!

பொன் : ஆம்! இவர்தாம். தெற்கெ இருப்பவர்போல வடக்கே போயிருப்பார்; வடக்கே இருப்பவர்போலத் தெற்கே போயிருப்பார்; தொலைவில் உள்ள மலையை அருகில் காட்டுவார்; அருகில் உள்ள மலையைத் தொலைவில் காட்டுவார்; ஆணைப் பெண்ணாக்குவார்; பெண்ணை ஆணாக்குவார்; இளையரை முதியர் ஆக்குவார்; முதியரை இளையர் ஆக்குவார்; பிணியும் நோயும் தீர்ப்பார்; இரும்பு செம்பு முதலியவற்றைப் பொன்னாக்குவார்; ஆற்றில் வெள்ளம் வருவிப்பார்; வானில் பறப்பார்; இச் செயல்களைக் கேள்விப்பட்ட பாண்டியன் அவரை அழைத்துவரக் காவலாளி களையும் அமைச்சரையும் அனுப்பினான். அ

சித்தர் செயலைப்பார்த்து நின்றனரே அல்லாமல் தாம் வந்த செயலை மறந்தனர். பாண்டியனே வந்தான்; வியந்தான்! ஒருவன் கொண்டுவந்த கரும்பைக் காட்டி, 'இக் கல்லானையை உண்ணச் செய்யும்' என்றான். சித்தரிடம் பிளிறி எழுந்து பீடு