உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

இளங்குமரனார் தமிழ்வளம் 31

என்று ஆபுத்திரன் வணங்குவதாக மணிமேகலை கூறுகின்றது. இங்கே நாமகளுக்குச் சிலையெழுப்பி வழிபாடும் நிகழ்கிறது. வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெண்கமலத்து வீற்றிருப் பாளுக்கு வெண்டாமரையே விருப்பென்று அதனைச் சூட்டியுள்ளார்கள்!

பொன் : இத் தென்மேற்கு மூலையில் உள்ளது விழாமூர்த்தி (உற்சவமூர்த்தி) திருக்கோயில். இவ் வடமேற்கு மூலையில் காசிவிசுவநாதர் கோயில்! விசுவநாதர், விசாலாட்சி, பிள்ளையார், காளை, முருகர் எல்லாமே வெண்பளிங்கு.

கண்

மதுரையை வந்து பார்க்கவே நமக்கு இவ்வளவு காலமாகி விட்டது. நாம் காசிக்கு எப்பொழுது போகப் போகிறோம்! நம்மைப் போல் போவதற்கு முடியாதவர்கள் இங்கிருந்து கொண்டே ஆங்கிருக்கும் இறைவரைக் கண்டு கொள்வதற்குச் செய்த நல்ல ஏற்பாடு இது.

பொன் : ஆம்! இப்படியே ஐந்து மன்றங்களையும், ஐந்து இலிங்கங்களையும் புகழ்பெற்ற கோயில் மூர்த்திகளை யும் இத் திருக்கோயிலிலேயே காணலாம். மற்ற கோயில்களிலும் இத்தகைய ஏற்பாடுகள் செய்யப் பெற்றுள்ளன. அடுத்துப் 'பிச்சைப் பெருமான்' கோயில் உள்ளது. அவருக்கு இப்பால் இருவரும் அப்பால் இருவருமாக முனிவர் மனைவியர் நால்வர் உளர். இறைவர் புன்னகையுடன் உள்ளார். மகளிர் நால்வரும் நால்வகைப் பார்வையராய் நல்ல ஏக்கத்துடன் உள்ளனர்.

கண்

ஐம்பொன்னால் செய்யப் பெற்ற இப் பிச்சைப் பெருமானையும் இங்கே நிறுத்தியுள்ளனர். இவர் நடையழகும் பாம்பலங்காரமும் குண்டைப்பூத நிலையும் மானின் நிமிர்ந்து வளைந்து இருகால் நிறுத்தி இருகால் தூக்கி அறுகுண்ணும் அழகும் அருமையாக அமைந்துள்ளன. இவர் திருவடிக் குமிழையும் கூட அழகாக வார்த்தவர்கள் திருமுகப் பொலிவை விடுவரா?

பொன் : வடக்குத் திருச் சுற்றில் இம் மேற்குக் கடைசியில் 'மேதா தக்கணா மூர்த்தி'யுள்ளார். இவ்வுட்சுவர்