உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

85

இவர்கள் உயரமே 3.6 மீட்டர்! மேற்கைகளில் சூலமும் செண்டும் கொண்டுள்ளனர். கீழ்கைகளில் இடப்பால் அடைக்கலம் அருள்கின்றனர். வலப்பால் கையில் ஒற்றை விரல் தூக்கியுள்ளனர். இவர்கள் ஆட் கொண்டார், உய்யக் கொண்டார் எனப் பெறுவர். : இடக்காலை ஊன்றிய அழகும், வலக்காலைத் தூக்கிய அழகும், பாம்பு சுழன்று கிடக்கும் அழகும், தண்டம் நிற்கும் நிலையும் தனித் தனிச் சிறப்புக் குரியவையே! கல்லின் தேர்ச்சியும், அதில் ஏற்றிய மெருகும் வேலைப்பாடும் மிக விஞ்சுகின்றன. காவல் வீரர்களே! நீங்கள் உலகோரை ஆட்கொள்ளுங்கள்; உய்யவுங் கொள்ளுங்கள்!

பொன் : இவர்களுக்கு அருகே உள்ள இருபக்கத் தூண் களையும் பார்!

கண்

ஐயனுக்கு ஐந்து தலையுண்டு என்று அறிவோம். அம்மைக்கும் ஐந்து தலையா? சரியான வாழ்க்கைத் துணைதான்.

பொன் : இவ்வாயிலைக் கடந்து வலமாகச் செல்வோம். சொக்கர் கோயில் பெருமண்டபத்தைச் சுற்றியுள்ள இச் சுற்றுச் சுவர் முழுமையும் திருவிளையாடல் ஓவியங்கள் சுதையால் எழுப்பி வண்ணந்தீட்டப் பெற்றுள்ளதைப் பார். எல்லாத் திருவிளையாடல் களுமே இங்கே காட்டப் பெற்றுள்ளன.

கண்

ஒரு திருவிளையாடலுக்கே கதை விளக்கத்திற்குத் தக்கவாறு பல காட்சிகளும் காட்டப் பெற்றுள்ள னவே.

பொன்: ஆமாம். இங்கே வந்தியம்மையைப் பார். இங்கே சூரியனும் உசையும் உளர்; பிரதிஉசையும் உள்ளார். இதன் தென்சுற்றில் சேக்கிழார்பெருமான் முதல் நாயன்மார் திருவுருவங்கள் உள்ளன. அவற்றை அடுத்து இலிங்கப் பெருமான், கலைமகள், மங்கையர் எழுவர் (சத்தமாதர்) இறைவர், இறைவர், பிள்ளையார் இவர்களைப் பார்.

கண்

66

'சிந்தா தேவி செழுங்கலை நியமத்து நந்தா விளக்கே நாமிசைப் பாவாய்”