உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

இருவரும்:

இளங்குமரனார் தமிழ்வளம் 31

கிடந்தாயே! அந்த வாக்கால், உன் அடி தொட்டு வணங்கிப் பொடிபூசிக் கொள்கிறோம். கண்ணப்பா "குற்றம் நீ குணங்கள் நீ" பாடுவோம்.

“குற்றம் நீ குணங்கள் நீ கூடல்ஆல வாயிலாய்! சுற்றம் நீ பிரானும் நீ தொடர்ந்திலங்கு சோதி நீ கற்றநூல் கருத்தும் நீ அருத்தமின்பம் என்றிவை முற்றும் நீ புகழ்ந்துமுன் உரைப்பதென் முகம்மனே”

பொன் : இறைவன் திருமுன்னே இடப்பால் இருக்கும் இது வெள்ளியம்பலம்!

கண் : முகடுமட்டும் தான் வெள்ளியாக இருக்குமென எண்ணினேன். இறைவனுமே வெள்ளியுருக் கொண்டு விளங்குகின்றான்! திருவருள் பொழியும் முகத்தை மட்டும் வெள்ளியால் மூடி விரும்பாமல் விட்டு ள்ளார்கள்.

பொன்: கண்ணப்பா! கண்ணப்பா! இறைவன் ஊன்றிய திருவடியையும் தூக்கிய திருவடியையும் பார்த்தாயா!

கண்

ஆமாம்! இப்பொழுதுதான் பார்க்கிறேன். ஊன்றிய திருவடியைத் தூக்கி, தூக்கிய திருவடியை ஊன்றி ஆடுகிறார்! திருவிளையாடலில் வரும் கால்மாறி யாடிய கதை இதுதானே.

பொன் : ஆம். இறைவனுக்குத் திருமணம் நிகழ்ந்தபோது திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் விருந்து ண்டனர். பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும் பொன்னம்பலக் கூத்தைக் காணாமல் உண்ணாத நோன்பு உடையவர்கள். ஆகலின் அவர்களுக்காக இறைவன் வெள்ளி மன்றம் படைத்து, அவர்கள் கண்டு மகிழ்ந்து உண்ணுமாறு ஆடினான் என்பது வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய செய்தி. பின்னே, இராசசேகர பாண்டியன் என்பவன் கூத்துக்கலை பயின்றானாக, அக் கூத்தால் தனக்கு உண்டாகும் களைப்பை நினைத்து, எப்போதும் இறைவன் இப்படித் திருக்கூத்து ஆடிக் கொண்டே இருக்கிறானே, இவன் கால் நோவாதா? என ஏங்கினான்; இறைஞ் சினான்; கால்மாறியாடி அருள் வேண்டினான்! அருள் புரியவில்லையானால் ஆருயிர் துறக்கவும்