உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

மதுரைக் கோயில் வரலாறு

91

நோக்கி எதிரே அமைந்துள்ள தூண்களில் இருப்பவர் பதஞ்சலி முனிவரும், புலிக்கால் முனிவரும் ஆவர்!

அம்மைக்கு அவர் பிள்ளை குமரகுருபரர், பிள்ளைத் தமிழ் பாடினார். அப்பருக்கு, அவர் புகழ்பாடும் பரஞ்சோதியார் திருவிளையாடல் பாடினார்! அப்பருக்கென ஒரு பிள்ளைத் தமிழ் எவரும் பாடவில்லையே!

பொன் : முழுமுதல் இறைவன் பிறவாப் பெரியவன் அவனுக்குப் பிறரைப் போலப் பிள்ளைத்தமிழ் பாடும் வழக்கம் இல்லை! இல்லையானால், எத்தனையோ நூல் புனைந்து கொண்ட அவன், பிள்ளைத்தமிழ் மாலையை மட்டும் புனையாமல் போவானா?

மாலைகளைப்

கண் : மிகச் சரிதான். சொக்கர் முன்னுக்குச் செல்வோம். பொன் : இவர்கள் தில்லைவாழ் அந்தணர் முதலாக அறுபத்து மூவர்! இவர்கள் எழுந்தருளச் செய்யும் மூர்த்திகள்! இவையனைத்தும் செப்புத் திருமேனிகள்!,இவர்கள் உற்வச சித்தரும், சந்திரசேகரும் ஆவர்.

கண்

இறைவன் திருமுன்னே நிற்கும் இக் காவல் வீரர்கள், முன்னே கண்ட காவல் வீரர்களுடன் உடன் பிறந்தார் கள் போல் உள்ளார்கள்! காவல் காப்பவரைக் கண்டே கலங்கினால் தானே களவு, பொய் நாட்டில் தலைகாட்ட மாட்டா! அவர்கள் தோற்றமும் துணிவும் தீமை செய்யக் கருதுவாரை அச்சுறுத்த வேண்டுமே! இக் காவல் வீரர்களைக் கண்டு காவல் துறைக்கும் படைத் துறைக்கும் ஆள்களைப் பொறுக்கி எடுக்க வேணடும்போல் எனக்குத் தோன்றுகிறது.

பொன் : உனக்கு ஏன் தோன்றாது! உனக்குத் தோன்றுவதால் ஆவது என்ன? அத்துறையில் பொறுக்கி எடுப்பார்க்குத் தோன்ற வேண்டும் என்று இவர்களிடம் வேண்டிக் கொள்ளலாம். நம்மால் முடிந்தது அவ்வளவுதான்.

கண் : சரி! அப்பனை வழிபடுவோம்.

பொன் : அப்பனே, சொக்கநாதனே, தேனொழுகும் திருவாயால் தேவாரம் பாடிய உன் செல்வப் பிள்ளை, சீர்காழிச் செல்வர் ஞானசம்பந்தர் திருவாக்குக்கு அலந்து