உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

பொன் : ஆம்.

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 318

அப்படியானால் தொல்காப்பியர் கணக்குப்படி, 'எழுத்தெனப்படுவ, அகர முதல னகர இறுவாய் முப்பஃ தென்ப சார்ந்து வரல் மரபின் மூன்றலங் கடையே” என்றவாறு முப்பத்து மூன்று தாமே இருக்க வேண்டும். அட்சரம்-எழுத்து; எழுத்துக்கு ஓர் இலிங்கம், அட்சர இலிங்கம்!

பொன் : நான் தான் முன்னமே சொன்னேனே; இது வடமொழி எழுத்துக் கணக்கு! அதில் உயிரும் மெய்யும் 51 தாமே!

கண் : சரிதான்; போகலாம்!

பொன் : இங்கே திருமகள் அருள் வழங்கிக் கொண்டிருக் கிறாள்!

கண்

இதற்கு நேரே தென்பக்கச் சுற்றில் கலைமகள் இருக்கக் கண்டோமே! வாழ்வு சிறக்கக் கல்வியும் வேண்டும்; செல்வமும் வேண்டும்; இஃது ஒருகண் என்றால் அஃதொரு கண் என்பது போல் அல்லவா இறைவனுக்கு இப்பாலும் அப்பாலும் இவர்களைப் படைத்துள்ளனர். 'கல்வியா? செல்வமா?' என்ற வெற்றுப் பேச்சு என்ன வேண்டியிருக்கிறது! இரண்டுமே வேண்டும் என்பது தானே மெய்யாகிறது! பொன்: ஆமாம். இரத்தினசபை இது. அம்மை சிவகாமியுடன் அப்பன் உள்ளார். இது வன்னியும் கிணறும் அழைத்த திருவிளையாடல் காட்சி, இந்த வடகிழக்கில் கல்லால மரமும் இலிங்கப் பெருமானும் காண்கிறோம்! இனி ஆறுகால் மண்டபத்தின் வழியே சொக்கர் திருமுன் செல்வோம்.

கண்

அம்மை திருமுன்னும் ஓர் ஆறுகால் பீடம் இருந்ததே. பொன் : ஆம், அதனைப் போலவே இதுவும் வரலாற்றுச்

சிறப்பு உடையதாகும். இங்கே பரஞ்சோதி முனிவர் இயற்றிய திருவிளையாடற் புராணம் அரங்கேற்ற மாகியது.திருமலை நாயக்கருக்கு ஆண்டுதோறும் இப்பீடத்தில் தான் பரிவட்டம் கட்டப் பெற்றது. செம்பாலான இக் காவல் வீரர்களைச் செய்தளித் தவர் அத் திருமலை மன்னரே ஆவர். இப் பீடத்தை