உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102

31

இளங்குமரனார் தமிழ்வளம் -31

பொன் : நீ சொல்வது சரிதான்; ஏற்றுக் கொள்கிறேன். கடைசித் தூண் பற்றி முன்னரே பேசினோம்.

கண் : ஆம். உள்ளே போகலாம்.

பொன் : இவர்கள் வாயில் காவலர். தெற்குப் பார்த்து நின்று வரவேற்கின்றார், மேல்பால் நிற்பவர்; கீழ்பால் நிற்பவர், நாகத்தின் மேல் கால் வைத்துத் தண்டத்தின் மேல் கை போட்டு நடனக் கோலத்தில் வரவேற் கிறார். நடராசர் உள்ளே இருக்கிறார்; 'நட ராசா உள்ளே' என்று நம்மை ஏவுகிறார். மேற்கே நிற்கும் காவல் வீரருக்கு மேல்பால் தூணில் பிள்ளையார் உள்ளார். அவர் கையில் அமுத கலயம் உள்ளது. கலைவல்ல சிற்பி முன்னோர் மொழி வழியே ஒரு கொம்பை ஒடித்திருப்பான் பிள்ளையாருக்கு. எந்தக் கொலைஞனோ இருக்கும் ஒரு கொம்பையும் ஒடித்துவிட்டான்!

கண்

பொன் : கூத்தாடும் இப் பிள்ளையாருக்குக் கைகள் பத்து! துதிக்கையுடன் சேர்த்தால் பதினொன்று. 'அரசனும் ஐங்கரனும் ஒருவரே!' என்பதைக் குறிக்கொண்டு இப்படிப் படைத்துள்ளனர். அடுத்த தூணில் இருப்பவர் வேட்டைப் பெருமான் (கிராதர்). இவர் கையில் உள்ள வில் நாணைப் பார். அது பாம்பு. இரு விரல்களில் இரு கால்களை ஊன்றி நிற்கும் மான் எடுப்பாக உள்ளது. கையில், அம்பும், அனற் கொழுந்தும் உள்ளன.

கண்

அடுத்திருப்பவர் பொற்றாமரைக் குளத்தின் படித் துறைத் தூணில் நின்றவன் போலத் தெரிகின்றாரே. பொன் : ஆம்! அவர்தாம்! மதுரைக் கோயிலை முதற்கண் கண்ட குலசேகர பாண்டியர்.

கண் மார்பில் அணிந்த பதக்கமே இலிங்க உருவில் இருப்பது, இவர் இறையன்பை வெளிப்படுத்தும்.

பொன் : இடையில் செருகிய கத்தி, இவர் வீரர் என்பதை விளக்கும். கிழக்கே நிற்கும் காவல் வீரருக்குக் கீழ்பால் ஒருதிரு முருகன் உள்ளார்.