உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரைக் கோயில் வரலாறு

105

பொன் : இவனைப் பார்! இவன் தோளில் ஒரு பெண்ணை வைத்துள்ளான். அவள் கால் ஒன்று இடக்கையின் மேல் உள்ளது. வலக்கால் இவன் இடுப்பில் உள்ளது விரைந்து ஓடுவதுபோல் உள்ளான்.

கண்

தன் அன்புக் காதலியை அழைத்துப்போகும் இவனைத் தடுக்க அவள் உற்றார் உறவினர் வந்திருக்கலாம். அவர்களிடமிருந்து தப்பித்து இவளைக் கொண்டு போவதற்காக இந்த ஏற்பாட்டை இவன் செய்திருக்

கலாம்.

பொன் : இது, 'கலிகாலக் காட்சி இத்தகையது' என்பதைக் காட்டுவது என்கிறார்களே!

கண்

பரமன் பனிச்சடைமேல் பாவையை வைத்த செய்தியைப் பேசிக்கொண்டு, நாம் இப்படிச் சொல்வது சரியாகத் தோன்றவில்லை!

பொன் : சரி, நேரே போய்க் கூத்தப் பெருமானைக் கும்பிடுவோம். இருவரும் : "குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமிண்சிரிப்பும்

பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்

இனித்தமுடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்

மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே.’

55

பொன் : கண்ணப்பா! கூத்தப் பெருமான் திருமுன்னர் உள்ள இந் நடு மண்டபத்தின் இருபால் தூண்களையும் பார். கிழக்கே பிச்சைப் பெருமான், தருமன், வீமன், இரதி, வீரபத்திரர் ஆகியோர் உள்ளனர். மேற்கே மோகினி, அருச்சுனன், மனிதவிலங்கு, மன்மதன், அக்கினி வீரபத்திரர் ஆகியோர் உள்ளனர்.

கண்

பிச்சைப்பெருமான் வழக்கம்போல் எடுப்பாக நிற்கிறார். முனிவர் மனைவியரைப் பார்! மேலே இருவர்; கிழக்கே ஒருத்தி; தெற்கே ஒருத்தி! ஒருத்தி நிற்கும் நிலை தன்னையே மறந்துவிட்டாள் போல இருக்கிறது!