உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்

14. பிற மண்டபங்கள்

இம் மண்டபம் புதிதாகத் தோன்றுகிறதே!

பொன் : ஆம். கி.பி. 1960 ஆம் ஆண்டில் நிகழ்ந்த திருப்பணியின் போது கட்டப் பெற்றது இது. சைவத்துக்குப் புத்துயிரூட்டிய அரசி மங்கையர்க்கரசியார். அவர் வடிவமும், அவர் அமைச்சர் குலச்சிறையார், அரசர் நின்ற சீர் நெடுமாறர், திருஞானசம்பந்தர் ஆகியோர் திருவுருவங்களும் உள்ளன. அடுத்துள்ளது சேர்வை காரர் மண்டபம். இதனைக் கட்டிய பெரிய மருதுவின் சிலை இதோ உள்ளது. மேற்கே இருப்பது திருமண மண்டபம்!

கண்

ஊர்தோறும் திருமண மண்டபங்கள் பல இருந்தாலும் இதற்குத் தனிச்சிறப்பு அல்லவா! “வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி, ஊனாகி உயிராகி" நிற்கும் இறைவன் இறைவியரை, மணக்கோலம் கொள்வித்து மகிழும் இடம் இது. அறுபதுக்கு அறுபது திருமணம் நடத்தி வைத்துப் பிள்ளையும் பேரரும் மகிழ்வது எவரறிவர்? அத்தகைய மகிழ்ச்சிப் பெருக்கே இறைவனை மணக்கோலத்தில் வைத்து மகிழ்கின்றது. பொன் : கண்டு மகிழ்பவர் நம்போன்றவர்; இதனைக் கட்டி மகிழ்ந்தவர், அணிசெய்து மகிழ்ந்தவர் நம் நினைவுக்கு உரியவர். உள்ளே போகலாம்.

கண்

திருமண விழா நாளில் நாம் இப்படி அமைதியாகப் பார்க்க முடியுமா?

பொன் : திருமண வீட்டிலேயே ஆரவாரம் வெள்ளமாகப் பெருக்கெடுக்கும்போது, உலக நாயகர் திருமணத்தில் நாடெல்லாம் கூடும் நம்பியின் திருமணத்தில் ஆரவாரம் இல்லாமல் இருக்குமா?

கண்

இக் கல்மண்டபத்தில்தான் திருமணக் காட்சி நிகழுமா?