உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

கண்

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

விளக்கிக் காட்டும் இந்த விந்தைத் தூண்கள் ஐந்தையும் பார். இசையெழுப்பியும் பார்.

ஆமாம்! அறிவுடைய மாந்தன் நினைத்தால் நீர் பாடுகின்றது! மண் பாடுகின்றது; மரம் பாடுகின்றது; நரம்பு பாடுகின்றது; தோல் பாடுகின்றது உலோகம் (மாழை) பாடுகின்றது; கல் மட்டும் விதிவிலக்கா? இப்படி இசைக்குமாறு தூணுக்குப் பலவேறு வடிவங்களை அமைத்துள்ள தேர்ச்சியும் அவற்றையும் ஓர் ஒழுங்குபட நிறுத்திய திறமும் நினைவு கூரத்தக் கனவாம்.

பொன் : இந்த வடக்குக் கோபுரவாயிலுக்கு நேரே இருக்கும் மண்டபம் கூட்டு வழிபாட்டு மண்டபம். இப் பகுதிதான் கரியமாணிக்கப் பெருமாள் கோயிலாக இருந்தது என்பர். அங்குள்ள அடைப்பை நீக்கிச் செடிகொடிகளை வெட்டி ஆராய்ந்தால் சில அரிய செய்திகள் கிடைக்கலாம். வடக்கு ஆடி வீதியில் இருந்து வலமாகத் திரும்புவோம். இது பதினாறு கால் மண்டபம். இதற்குத் தட்டுச்சுற்று மண்டபம் என்ற பெயரும் உண்டு. இங்கு மாணிக்க வாசகருக்காக இறைவன் நரி பரியாக்கியது, பரி நரியாக்கியது முதலிய திருவிளையாடல் காட்சிகள் ஆவணிமூலத் திருநாளில் நிகழ்த்தப்பெறும்.