உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

159

வீடு பூட்டியிருப்பதைக் கூறினாள். பூட்டைத் தொட்ட அளவில் திறக்குமென முதியவர் கூற அவ்வாறே திறந்து, சமையலை முடித்து அவருக்கு விருந்தளித்தாள். விருந்துண்ட முதியவர், காளை உருவில் காட்சி வழங்கினார். கெளரி நடுக்கமுற்றாள். அப்பொழுது வெளியூர்க்குப் போனவர்கள் திரும்பினர். காளையாக இருந்த முதியவர் குழந்தையானார். 'இக் குழந்தை யார்?' என்று மாமன் மாமியார் கேட்கத் 'தேவதத்தன் குழந்தை’ என்றாள் கெளரி. “அவன் சைவன்; அவன் குழந்தையை இங்கே வைத்திருக்கக் கூடாது” எனக் கௌரியுடன் வெளியே தள்ளினர். இறைவனை நினைந்து வணங்கினாள். கையில் இருந்த குழந்தை மறைந்தது. இறைவன் இறைவியுடன் காட்சி வழங்கினான். இறைவியோடு, இணைந்தாள் கௌரி.

24. கால் மாறியாடியது

இராசசேகர பாண்டியன் ஆடற்கலையில் தேர்ச்சி மிக்கவன். அவன் கால அளவு கருதாமல் நெடிய பொழுது ஆடுதல் உண்டு. அப்பொழுது அவன் கால்களில் வலி காணும்; சோர்வு ஏற்படும் அவற்றை உணர்ந்த அவன் "இடைவிடாமல் ஆடிக் கொண் டிருக்கும் இறைவனின் கால்களிலும் வலியுண்டாகுமே" என்று எண்ணி வருந்தினான். இறைவன் கால் மாறியாடியனால் சோர்வு நீங்கும் எனத் தீர்மானித்தான்.

சிவனிரவு அன்று கோயிலுக்குச் சென்ற இராசசேகரன் நெடும் பொழுதிருந்து வழிபாடு செய்தான். நான்காம் யாமத்தில் நிகழும் பூசையும் முடிந்தது. அப்பொழுது பாண்டியன் இறைவனிடம் 'இறைவா! ஊன்றியுள்ள காலைத் தூக்கியும் தூக்கியுள்ள காலை ஊன்றியும் நீ மாறியாட வேண்டும். அவ்வாறு செய்யவில்லையானால் யான் இவ்விடத்திலேயே என் உயிரை விடுவேன்" என்று மன்றாடினான். அவன் வேண்டுதலுக்கு இரங்கி இறைவன் கால்மாறியாடினான். வெள்ளியம்பலத்தில் இறைவன் கால்மாறியாடும் திருக் காட்சியை இன்றும் காணலாம். 25. பழியஞ்சியது

திருப்புத்தூரில் இருந்து ஒரு மறையோன் தன் மனைவியை யும் கைக்குழந்தையையும் கூட்டிக் கொண்டு மதுரையில் இருந்த தன் மாமனார் வீட்டுக்குப் புறப்பட்டு வந்தான். வரும் வழியில் ஓர் ஆலமரத்தின் அடியில் மனைவியையும், குழந்தையையும் இருக்க வைத்துவிட்டு நீர் தேடிச் சென்றான். சென்று மீண்ட போது, மனைவி அம்புபட்டு இறந்து கிடந்தாள். அருகில் ஒரு