உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

இளங்குமரனார் தமிழ்வளம் -31 31ஓ

தோன்றினான். அவனிடம், மன்னனையும், மதுரையையும் அழிக்குமாறு கட்டளையிட்டனர்.

அரக்கன் ஒரு பெரும் பாம்பின் வடிவு கொண்டு, உலகமெல்லாம் அஞ்சும்படி புறப்பட்டான்.மதுரையின் மேற்குத் திக்கில் இருந்து மதுரையை முழுவதுமாக விழுங்கி விடுவது போல் வந்தான். அதனைக் கண்ட மக்கள் அஞ்சி அலறிக் கொண்டு ஓடிப்போய் மன்னனிடம் உரைத்தனர். அரசன் றைவனை வணங்கி, அவன் அருளுடன் வில்லும் அம்பும் ஏந்திச் சென்றான். அம்பு விட்டுக் கொன்றான். கொன்ற அளவில் அப்பாம்பு கொடிய நஞ்சைக் கக்கியது. அந்நஞ்சே ஊரை அழித்து விடும் போல் கொடியதாய் இருந்தது. அதனைக் கண்ட அரசன் இறைவனிடம் வேண்டினான். இறைவன், தன் முடியிலுள்ள நிலவின் அமுதத்துளியொன்றை நகர்மீது தெளிக்க நஞ்சின் கொடுமை முற்றாக ஒழிந்தது.

29. மாயப்பசுவை வதைத்தது

.

நாக வடிவில் வந்த அசுரன் மாய்ந்துபோன அளவில் ‘என் செய்வது?' என அமணர் எண்ணி வேறுமோர் வேள்வி செய்து பசு ஒன்றை வருவித்தனர். பசுவை வணங்கும் சிவனெறியர் அதனைக் கொல்லார் என்னும் துணிவு அவர்களுக்கு இருந்தது. பசு அஞ்சத்தக்க வடிவுடன் மதுரையை அலைக்கழித்தது. இதனை நகரவர் வழியாக அறிந்த பாண்டியன் அனந்த குணண் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வேண்டி நின்றான்.

றைவன் நந்தியை நோக்க நந்தி வலியதும் பொலிவு மிக்கதுமாம் காளை வடிவத்தில் பசு நிற்கும் இடத்தை அடுத்தது. பசுவுக்கும் காளைக்கும் பெரும் போர் நிகழ்ந்தது. எனினும் பசுவைக் கொல்ல விரும்பாத காளை தன் வடிவழகால் பசுவை மயக்கியது. மயங்கிய பசு தன் மோகப் பெருக்கால் வீரியத்தை விட்டு வீழ்ந்து இறந்தது. காளை தன்னுரு மறைந்து நந்தியாய் இறைவனை அடுத்தது. இதனைக் காட்டும் கதைச் சான்றாய்ச் சொல்பவை மதுரையை அடுத்துள்ள பசுமலை, காளைமலை என்பவை.

30. மெய்க்காட்டிட்டது

பாண்டியன் குலபூடணன் என்பவன் ஆண்டுவரும் நாளில் சேதிராயன் என்னும் வேடர் தலைவன் தன் படையைப் பெருக்கிப் பாண்டியனை மோதி அழிக்கக் கருதினான். அச்செய்தியறிந்த பாண்டியன், தன் படைகளைப் பெருக்குமாறு