168
31ஓ
இளங்குமரனார் தமிழ்வளம் -31
வணங்கி வீட்டுக்கு வந்தான். உலவாக் கோட்டையைக் கண்டு இறையருளைப் போற்றினான்.
39. மாமனாக வந்து வழக்குரைத்தது
தனபதி என்பவன் ஒரு வணிகன்; பெருஞ்செல்வன்; எனினும் அவனுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. அதனால் தன் தங்கையின் மகனைத் தத்தாகக் கொண்டு வளர்த்து வந்தான். ஒரு நாள் தங்கை தன் அண்ணன் மேல் சினங் கொண்டு தடிப்பாகச் சில சொற்கள் சொல்லும் போது "பிள்ளைப் பேறற்ற பாவி என்றாள். அதனை எண்ணி நொந்துபோன தனபதி 'வரும் பிறப் பிலாவது மகப்பேறு வாய்க்க வேண்டு'மெனத் தவம் செய்யச் சென்றான்.
தனபதியின் பங்காளிகள் இச்சிறுவனால் என்ன செய்ய முடியுமென நினைத்துச் சொத்தையெல்லாம் தம்முரிமை யாக்கிக் கொண்டனர். தனபதியனின் தங்கை புகலொன்றும் இல்லாதவளாய், இறைவன் திருக்கோவில் சென்று முறை யிட்டாள். தாமே வந்து வழக்குரைத்து உதவுவதாக இறைவன் விண்ணொலியால் அறிவித்தான். அறவோர் அவையைக் கூட்டு மாறும் கட்டளையிட்டான் இறைவன்.
தனபதியின் தங்கை அறவோர் அவையைக் கூட்டினாள். அங்குத் தனபதி வடிவிலே இறைவன் வந்து ஆங்கியிருப்பவர் களையெல்லாம் அடையாளம் சொல்லி, சொத்து விளக்கங் களையும் எடுத்துரைத்துச் சொத்தை எழுத்து வடிவில் எழுதச் செய்தான். பின்னர்த் திருவுருமறைந்தான். இறைவனே மாமனாக வந்து வழக்குரைத்தான் என அவையோர் மகிழ்ந்து போற்றினர். 40. வரகுணனுக்குச் சிவலோகம் காட்டியது
பாண்டிய நாட்டை வரகுணன் என்பவன் ஆட்சி செய்து வந்தான். அவன் ஒருநாள் வேட்டைக்குச் சென்று திரும்பும் போது அவன் கதிரையின் காலில் மிதிபட்டு வழியில் உறங்கிக் கிடந்த ஒரு மறையோன் இறந்தான். இறந்த அவன் உறவினர்க்கும் மறையோர்க்கும் வேண்டுவனல்ெலாம் தந்தான். அப்பாவம் நீங்குதற்காக நாள்தொறும் 1008 முறை கோயிலை வலம் வந்தான். எனினும் அவனைப் பற்றிய பாவம் நீங்காமல் அலைத்தது. அந்நிலையில் பாண்டியன் இறைவனை அடுத்து மன்றாடினான்.
"அரசே அஞ்சாதே! உன்னோடு சோழன் போருக்கு வருவான். வருங்கால் நீ அவனைத் துரத்திச் செல்ல அவன் பின்