உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிளையாடல் கதைகள்

37. சோழனை மடுவில் வீட்டியது

167

சுந்தரேச பாதசேகரன் என்பவன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்து வந்தான். அக்காலத்தில் சோழநாட்டை ஆட்சி செய்த வேந்தன் படைவலிமை மிக்கவனாகப் பாண்டிய நாட்டைக் கவர்வதற்கு வந்தான். பாண்டியன் தன் படையின் சிற்றளவையும் சோழன் படையின் பேரளவையும் எண்ணி என் செய்வதெனத் திகைத்துச் சொக்கர் பெருமானை வழிபட்டு அருள் புரியுமாறு வேண்டினான். "நீ வெற்றி பெறுவாய்; நாமும் போருக்கு வருவோம்" என்று உருவிலி உரையாய் உரைத்தான் இறைவன்.

பாண்டியன் படையும் சோழன் படையும் களத்தில் மோதின. அந்நிலையில் பாண்டியன் படையுள் இறைவன் ஒரு வேடன் வடிவில் புகுந்து சோழன்படை புறமுதுகிடுமாறு போரிட்டான். சோழன் படை அஞ்சி ஓடும் வேளையில் திரும்பிப் பார்க்க வேடனாகப் போரிட்டவனைக் காணவில்லை. அதனால் துணிவு கொண்டு பாண்டியன் படையை எதிரிட்டுத் தாக்கியது. பாண்டியன் படை அஞ்சிப் பின் வாங்கி ஓடியது. சோழன் படை விரைந்து துரத்திக் கொண்டு வர ஊடே ஒரு பெரிய மடுக் கிடந்தது. அதில் பாண்டியன் படை புகுந்து இறைவன் அருளால் தப்பியது. சோழனும் அவன் படையும் அம்மடுவில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் இறந்தனர். 38. உலவாக் கோட்டை அருளியது

அடியார்க்கு நல்லான் என்பவன் சிறந்த சிவனெறிச் செல்வன். தன் நிலத்தின் வருவாய் எல்லாவற்றையும் அடியார் களின் விருந்தோம்புதலுக்கே செலவிட்டு வந்தான். இந்நிலையில் அவன் நிலத்தின் விளைவும் குறைந்து இல்லாமலும் போய் விட்டது.வாங்கும் இடத்தெல்லாம் கடன் வாங்கி அடியார்க்கு விருந்தோம்புதல் கடனைத் தவறாமல் செய்து வந்தான். எவ்வளவு நாள்களுக்குத்தான் கடன் கிடைக்கும்? கடனும் கிடையாமல் போகவே இறைவன் கோயிலையடைந்து எம்பெருமானே! அடியார்க்கு விருந்து செய்யக் கடன் தருவாரையும் காணேன்; கடன் தருவாரை யாவது காட்டும்; இல்லாவிடின் இங்கேயே என் உயிரை விடுவேன்" என்றான். அவன் இறையன்பையும் அடியார் அன்பையும் அறிந்து மகிழ்ந்த றைவன் "அன்பனே, உன்வீடு செல்க; அள்ள அள்ளக் குறையாத தவசக் கோட்டையைப் படைத்துள்ளோம்; அதனைக் கொண்டு வழக்கம் போல் அடியார்க்கு விருந்து செய்க" என்று விண்ணொலி எழுந்தது. அடியார்க்கு நல்லான் அகமகிழ்ந்து