236
31ஓ
இளங்குமரனார் தமிழ்வளம் - 31
நேர்ந்த தீவிபத்தில் இம்மூன்றாம் பாகத்தில் தா முதல் நகரம் வரையுள்ள அச்சிட்ட பாகம் தவிர அச்சிடுதற்குப் பரிசோதித்து வைத்திருந்த அசலும் நகலும் ஆகிய காகிதக் கையெழுத்துப் பிரதிகள் முழுவதையும் இழந்துவிட்டமையாலும் ப, ம, ய,வ, என்ற அக்கர வர்க்கச் சொற்களடங்கிய அவ்விழந்த பாகத்தைப் புதிதாய்த் தேடிச் சேர்த்துப் பரிசோதித்து வெளியிடத் தொடங்கிய பொழுது நம், சங்க அச்சியந்திர சாலையில் வேண்டிய எழுத்துக்கள் போதுமான அளவு வாராதிருந்த மையாலும், பின் இப்புத்தகம் அச்சிடுவதில் எனக்கு உதவியா யிருந்தவர் விலகிக்கொண்டமையால் யான் ஒருவனே சொற் களைத் தேடிப் பொருள் கண்டெழுதுதல், ஒப்பு நோக்குதல், திருத்துதல், எழுதுதல் முதலிய எல்லா வேலைகளையும் கவனிக்க வேண்டியிருந்தமையாலும் இதனை வெளியிட இத்தனை யாண்டு தாமதமேற்பட்ட தென்பதை மிக்க விசனத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன்”
இனிக் கலைக்களஞ்சியம் போல்வதொரு வெளியீட்டு வாய்ப்பும் பைந்தமிழ்ப் பாண்டித்துரையார்க்கு வாய்த்தது. 'அபிதான சிந்தாமணி' என்பதொரு நூல். அது சென்னை, பச்சையப்பன் உயர்பள்ளித் தமிழாசிரியராக இருந்த ஆ.சிங்காரவேலு முதலியார் அவர்களால் இயற்றப் பெற்றது. அந்நூல் 1910 ஆம் ஆண்டில் தமிழ்ச்சங்கத்தின் 9 ஆம் வெளியீடாக வெளிவந்தது.அதன் வெளியீடு பற்றி அறிதல் சங்கப் பணிச்சிறப்பையும், பாண்டித்துரையார் பண்பு நலத்தையும் ஒருங்கே பாரித்துரைக்க வல்லதாம்.
அபிதான சிந்தாமணியை எழுதி முடித்த ஆசிரியர் சென்னையில் வாழ்ந்த செல்வர் சிலரிடம் காட்டி உதவி வேண்டினார்; அறிஞர்கள் துணையையும் வேண்டினார்; வேண்டிப் 'பெற்ற பேற்றை' அவரே உரைக்கிறார்.
"அவர்கள் இத்தகைய நூல் தமிழிற்கு இன்றியமை யாததே; அதனை வெளியிடுக என்றனரே அன்றி அதனை அச்சிட்டு வெளிப்படுத்த ஒன்றும் கூறிற்றிலர்.'
"
'பின்பு யாழ்ப்பாணம் மகா-ள-ள- ஸ்ரீ கனகசபைப் பிள்ளை பி.ஏ.,பி.எல்,அவர்களிடம் பி.ஏ., பி.எல், அவர்களிடம் இதன் ஒரு பாகத்தைக் காட்டினேன். அவர், இஃது அரிய தமிழ்க் கதை அகராதி; இதனைச் சென்னையிலுள்ளார் ஆதரிக்க வேண்டும் என ஒரு பத்திரம் எழுதித் தந்தனர். புரொபஸராயிருந்த சேஷகிரி சாஸ்திரியார் அவர்களிடம் காட்டினேன். அவர், இதனை