உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262

இளங்குமரனார் தமிழ்வளம் 31

என்னும் பெயரால் சி. இலக்குமணப் போற்றி மொழி பெயர்த்துள்ளார். 'செர்பட்டு பென்சர்' இயற்றிய ஆங்கில நூல் "கல்வி விளக்கம்" என்னும் பெயரால் கள்ளபிரான்பிள்ளை, அப்பாவுப் பிள்ளை, வெ.ப. சுப்பிரமணிய முதலியார் ஆகியோரால் மொழிபெயர்க்கப் பெற்றது. சிட்னி சிமித் என்பார் இயற்றிய ஆங்கில நூல் 'பெண்கல்வி' என்னும் பெயரால் மொழிபெயர்க்கப் பெற்று வெளிவந்தது. தருக்க சூத்திரம், தத்திதாந்தபதம், அனுமான விளக்கம், பிரதாபருத் திருயம் என்பவை வடமொழி தழுவிய ஆய்வுக் கட்டுரை களாகும். இம்மொழி பெயர்ப்புப் பணி பின்னே விரிவாக நிகழ்ந்தமை செந்தமிழ்த் தொகுதிகளால் தெரிய வருகின்றன. மொழிபெயர்ப்புகளுள் நூல்களாக வெளி வந்தனவும் சில உள. அவற்றைச் செந்தமிழ் வெளியீட்டு நூற்பட்டி கொண்டு அறியலாம்.

4.தமிழாராய்ச்சி பற்றிய செய்திகள் : தமிழ்ச் சங்கம் தோன்றிய நாளில் தனித் தமிழ்க் கொள்கை தோன்ற வில்லை. மாறாகத் தென் சொல்லும் வட சொல்லும் இணைக்கு இணை கலந்து எழுதுவது இன்பம் என்று அந்நாளில் மொழிவல்ல புலவர்களும் புகுந்து விளையாடினர், வடசொற்கலப்பு மிகுதிக்கு மணிப்பிரவாளம் என அவர்கள் கொண்ட நடையேபோதும். இன்னும் ஒருபடி "மேலே சென்றும் ஈசான

தேசிகர்

போன்றோர் எழுதினர். ஐந்து எழுத்தால் ஒருமொழி என்பதே நாணத்தக்கது” என நாணமின்றி வெளியிட்டனர் (இலக்கணக் கொத்து பாயிரம் 7.) தமிழுக்குச் சிறப்பான எழுத்துகள் ற, ன, ழ, எ, ஓ, என ஐந்தாம் எஞ்சிய எழுத்துகள் எல்லாம் வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் பொதுவாம். ஆதலால், இச்சிறப் பெழுத்துகளைக் கொண்டது ஒரு மொழி என்று கூறுவரோ? என்னே கண்டுபிடிப்பு!

அறிஞர் கால்டுவெல் இவண்வந்தார். தமிழ், பிறமொழிக் கலப்பு இன்றி இயங்கவல்லது என்றும், உயர்தனிச் செம்மொழி என்றும் ஆய்ந்து நிலைப்படுத்தினார். அதன்பின் பரிதிமாற் கலைஞர் தனித் தமிழ் வித்தினை ஊன்றினார்; மறைமலை யடிகள் அதனைக் கொள்கை யாக்கி வளப்படுத்தினார்; மொழிஞாயிறு பாவாணர் 'தமிழே உலகின் முதல் தாய்மொழி' என்பதை நிலைப்படுத்தினார். அதனைப் பிறமொழி அறிஞர்கள் தம் ஆய்வால் உறுதிப் படுத்திக் கொண்டு வருகின்றனர். இந்நாளையிலும் தமிழ்ப் பேரறிஞர் என்பாருள் பலர் குழப்பிக்