மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
299
பெற்றதன்று. அவரவர் கலைத்திறம் கணித்த மேதமையால் வரிசை அறிந்த சீர்மையால் பதிக்கப்பெற்றதாம். திரு.வி.சு. கோமதி சங்கரஐயர் என்பார் எழுதிய, இசை உலகில் மகாவைத்திய நாத சிவன் என்னும் நூல் கூறுகின்றது (118-19)
"குன்னக்குடிக் கிருஷ்ணையருக்கு இட்ட வீரசங்கிலியின் முகப்பிலே வைரக்கல் ஒளிவீசப் பதிக்கப் பெற்றிருந்தது. பட்டினம் சுப்பிரமணிய ஐயருக்கு இட்ட வீரசங்கிலியின் முகப்பிலே இருட்டில் தூபச்சுடர் தோன்றுவது போன்றதொரு மாணிக்கக்கல் பதிக்கப்பெற்றிருந்தது. பல்லவி சேஷய்யருக்கு ட்ட வீரசங்கிலியின் முகப்பிலே நல்ல ஒளிவீசும் நீலக்கல் பதிக்கப் பெற்றிருந்தது. மகாவைத்திய நாதசிவனுக்கு இட்ட வீரசங்கிலியின் முகப்பிலே தகதகாயமான ஒளிதரும் மரகதக்கல் பதிக்கப் பெற்றிருந்தது. அவ்வாறான வீரசங்கிலியின் முகப்பிலே வெவ்வேறான இரத்தினக்கல் பதித்திருந்ததை நோக்கும் போது அவ்வித்துவான்களுடைய இசைத்திறத்தின் தராதரத்தினைப் பாண்டித்துரைத்தேவர் நன்கறிந்து பாராட்டியது போல அவ்வீரசங்கிலிகள் அளிக்கப் பெற்றனவோ என்று எண்ணும் படி இருந்தது'
"ஐந்தாம் நாள் இசைவிழாவில் மாயூரம் வீணை வைத்திய நாதையருடைய வீணைக் கச்சேரியும், ஆறாம் நாள் இசை விழாவிலே சரபசாஸ்திரிகளுடைய புல்லாங்குழல் கச்சேரியும், ஏழாம்நாள் சைவிழாவிலே நாதசுரக் கச்சேரியும் நடந்து சிறப்புற்றது. அவர்களும் தக்க பரிசில்களும் சன்மானங்களும் அடைந்தார்கள். இவ்விசை விழாப் போன்று அதுவரை எங்கும் எவராலும் நடத்தப் பெற்றதில்லை என்ற சிறப்புத் தோன்றப் பாண்டித்துரைத்தேவர் அவர்கள் பெருமையடைந்தார்கள்”
நடத்திப்
சீரிளமைப் பருவத்திலேயே இவ்வாறு விழா எடுத்து வரிசையறிந்து சிறப்புச் செய்யும் நல்லாண்மை வாய்க்கப் பெற்ற பாண்டிவள்ளல், தம் முப்பத்து மூன்றாம் அகவைக்கு மேலே, பேரார்வத்தாலும் - பெருந்திறத்தாலும் நடாத்திய விழாக்களை எவ்வளவு சீரும் சிறப்பும் மல்க நடாத்தியிருப்பார்; நடாத்த இயலும் என்பதை மேலோட்டமாக நினைவாரும் நன்கு அறிவர்.
-
மூன்றாவது, பாண்டித்துரையார்க்குப் பிறவியொடும் அமைந்திருந்த பெறலரும் பெற்றிமை, தக்கோர்க்குப் பணிதல், இனியவை கூறல்,தாமே முற்பட்டு நின்று உதவுதல் இன்னவாகிய பிறர்க்கு அரிய நல்லியல்புகள் மல்கியிருந்தமை.