உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 31.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

298

விட்டது

இளங்குமரனார் தமிழ்வளம் - 31 31ஓ

அறிகிறோம். (திருவருட்பா. திருமுகப்பகுதி. 92-107); திரு. ஆ. பா பதிப்பு) ஆனால் 'இந்தச்சாலையால் எனக்கு மிகவும் சலிப்பு உண்டாகிறது' என்று வருந்தும் நிலை பிரசோற்பத்தி மாசி மாதம் 28ஆம் (12-4-1871) நாளிலேயே அடிகளாார்க்கு ஏற்பட்டு என்பதையும் அறிகிறோம். இடர்ப்பாடு மிக்க இத்திட்டத்தை நிறைவேற்றிக் காட்டுதற்குப் பாண்டித் துரையால் இயன்றமை அவர்தம் பொருள் வாய்ப்பும், ஆளுமைத் திறமும், சேதுபதிகளின் அரவணைப்பும், ஏனைக் குறுநில மன்னர்கள், பெருநிலக்கிழார்கள் ஆகியோர் நற்றுணையும் இருந்தமை யேயாம்.

இரண்டாவதாகக் குறிக்கத்தக்கது, தமிழ்ச்சங்க ஆண்டு நிறைவு விழாக்களின் சிறப்பாகும். தமிழ் நாட்டில் விளங்கிய பெரும் புலவர்கள் பலரும் கலந்து கொண்டு மகிழும் அளவில் சங்கவிழாக்கள் நடைபெற்றன. அவர்களுக்கு உறையுளும் சிறந்த விருந்தும் வழங்கப் பெற்றன; வழிச்செலவும் தரப் பெற்றது; பரிசுகளும் பாராட்டுகளும் அவரவர்க்குத் தக்க வகையில் வழங்கப் பெற்றன. "ஈதல் எளிது; வரிசையறிதலோ அரிது என்பதும் (புறம்.121) "பொது நோக்கு ஒழிமதி புலவர் மாட்டே என்பதும் (புறம். 121) சங்கக் கபிலர் வாக்கு. ஆனால் வையெல்லாம் பாண்டித்துரைப் பெருமானார்க்கு எளிதாகக் கைவந்திருந்தன. சங்கம் தோற்றுவிப்பதற்கு முன்னரே கைவந்த திறமாகவும் விளங்கின.

19

பாண்டித்துரைத் தேவர் இசைத்தமிழில் பெரிதும் ஈடுபாடு உடையவர். அவர்தம் இருபத்திரண்டாம் அகவையிலேயே மதுரைச் சங்கம் தோற்றுவிப்பதற்குப் பன்னீராண்டுகளுக்கு முன்னரேயே (1888) இசைப்புலவர்களை யெல்லாம் ஒன்று சேர்த்து ஓரிசை விழா நிகழ்த்தினார். இதுவே தமிழகத்தில் முதல் முதல் கூட்டப்பெற்ற ஓர் இசையவையாம்! அவ்விசைவிழாவை ஏழு நாள்கள் நடத்தினாராம் பாண்டித்துரையார். ஒவ்வொரு நாளும் ஒவ்வோர் இசைப்புலவரின் நிகழ்ச்சி நடாத்த ஏற்பாடு செய்யப் பெற்றிருந்ததாம். முதல் நாள், குன்னக்குடி கிருஷ்ணையரும், இரண்டாம் நாள், பட்டினம் சுப்பிரமணிய ஐயரும், மூன்றாம் நாள், நெய்க்காரப்பட்டி பல்லவி சேஷய்யரும் நான்காம்நாள், மகாவைத்தியநாத சிவனும் இசை நிகழ்ச்சி நடத்தினர். இந்நால்வருக்கும் கைகளில் வீர சங்கிலி அணிவித்தார். அச்சங்கிலி பொன்னால் செய்யப்பட்டது. அம்மட்டோ அச்சங்கிலியின் முகப்பில் 'கல்' பதிக்கப் பெற்றிருந்தது. அக்கல் 'வாளா' பதிக்கப்