மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம்
297
இதழில் 1904 சூலையில் வெளிப்பட்டது. அதுவே பாரதியார் படைப்புகளில் தமிழுலகம் கண்ட முதற் பாடலாகும். ஆனால் சங்கம் 1901 -இலேயே தோன்றித் தமிழ்க் கல்லூரி நடாத்தத் தொடங்கிவிட்டதே!
இவ்விடத்தில் குறிப்பிடம் தக்க மற்றொரு செய்தியும் உண்டு. மடங்களும், சத்திரங்களும், செல்வர்களும் சமய அடிப்படையில்ஏழை எளியவர்க்கு உணவு வழங்கி வந்த வழக்காறு பண்டு தொட்டே உண்டு. ஆனால், அதனைக் கல்விக்கு மடைமாற்றம் செய்த பெருமை வள்ளலார் இராமலிங்க அடிகளுக்கு உண்டு என்று துணிய வாய்ப்பு இருக்கிறது.
"பிரபவ வைகாசி மாதம் 11 ஆம் நாள் குருவாரம் உதயகாலம் சிங்கலக்கினத்தில் (23-5-1867) சமரச வேத் தருமச் சாலையின் செங்கற் கட்டடங்களுக்கு அஸ்திவாரங்களும் கிணறு குளம் கேணி முதலிய நீர்நிலையெடுப்புகளுந் தற்காலம் அவ்விடத்தில் நூதனமாகக் கட்டப்பட்ட விழன் மேய்ந்த மண் கட்டடச் சாலையில் ஒருசார் ஆகார தரும விருத்தியும் துவக்கஞ் செய்யும்படி நிச்சயித்திருக்கிறது" என்றும்,
46
"ஆபால விருத்தர்கள் வரையில் யாவர்க்கும் பயில்விக்கும் சன்மார்க்க போதினி என்கிற சாஸ்திர பாடசாலை ஒன்று நியமிக்கப்படும்" என்றும்,
"தமிழ், ஆரியம், இங்கிலீஷ், சன்மார்க்க போதினி... சாலையில்உபய கலாநிதிப் பெரும்புலவர் தொ.வேலாயுத முதலியார் முதலிய அறிஞர்களால்"...என்றும்,
CC
தில் வாசிக்கிறவர்களுக்குச் சிலகாலம் வாசித்து ஒருவாறு வாசிப்பிற் பயிற்சி நேரிட்டால், அந்தப் பயிற்சிக்கும் அவரவர் குடும்பத்திற்கும் தக்கபடி மாதந்தோறும் பொருளுதவி செய்யப்படும். காலை மாலை சுமார் ஐந்தைந்து நாழிகை வாசித்தல் வேண்டும்" என்றும் - சாலை விளம்பரங்களாக வரும் பகுதிகளால் சன்மார்க்க சமரச வேத தருமச் சாலையில் உணவு தந்து கல்வி புகட்ட ஏற்பாடு செய்யப் பெற்றது என்றும், மும்மொழிகள் கற்பிக்கவும் திட்டமிடப் பட்டிருந்தது என்றும், குழந்தையர் கற்பிக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது என்றும், குழந்தையர் கல்வி (ஆபாலர்) முதியர் கல்வி (விருத்தர்) ஆகிய இருவகைக் கல்வி முறைகளும் இயல, வகை காணப் பெற்றது என்றும், கற்றுத் தேர்ச்சி காட்டுவார்தம் வீட்டு நிலைமைக்கு ஏற்பப் பொருளுதவி செய்யும் கருத்தும் இருந்தது என்றும்