124
இளங்குமரனார் தமிழ்வளம் - 32
கத்தனுக் +கடுந்து ரோகம் கனக்கவே விசுவ சித்து
வைத்தவர்க் +கடுந்து ரோகம் மகாபாரம் ஆகும் அன்றே.
-
-
(அ ள்) பார - பெரிய; உவரி - கடல்; கத்தன் - கர்த்தன் (கடவுள்) கத்தனுக்கு அடும் துரோகம்; அடும் செய்யும்; விசுவசித்து வைத்தவர் - பற்றுடையவர்.
பகைவர்
31. கடன்படு பிதாவும், எங்கும் கண்டவர் தங்கட் கெல்லாம் உடன்படும் அன்னை தானும், ஓங்குபே ரழகி யாகித் திடம்பெறு மனையும், கல்வித் தேர்ச்சியில் மகனும் மையார் தடங்கணாய்! இவர்கள் நால்வர் சத்துரு ஆவர் அன்றே.
(30)
(அ - ள்) மையார் தடங்கணாய் மைதடவப்பெற்ற நெடுங் கண்ணை யுடையாய்; திடம்பெறுமனை வன்கொடுமையான மனைவியும்; தேர்ச்சியில் - தேர்ச்சி இல்லாத; சத்துரு பகைவர்.
கல்வியில்லான் முருக்கம்பூ
32. தேசிகம் இளமை முற்றச் சிறந்தநற் கலங்கள் ஆளும் காசினி ரசிதம் சொன்னம் கரிபரி படைத்தா னேனும் நேசமாம் வித்தை யற்றால் நிறைந்திடு முருக்கம் பூவின் “வாசனை இல்லா தோங்கும் வனப்பென வயங்கு வானே.
(37)
(அ ள்) தேசிகம் - அழகிய தோற்றம்; கலங்கள் -அணி கலங்கள்; காசினி - உலகம்; ரசிதம் - வெள்ளி; சொன்னம் பொன் ; கரிபரி - யானை குதிரை ; நேசம் - விருப்பம்; வனப்பென அழகென; வயங்குவான் - விளங்குவான்.
கற்றவன் பேறு
33. வித்தையுண் டானால் மாதா பிதாவொடு பாரி தம்மால் உற்றிடும் சுகத்தைக் காட்டும் உயர்திசை எங்குற் றாலும் மெத்தவும் புகழுண் டாக்கும் விரைமலர் மகள்க டாட்சம் நித்தியம் உண்டாம் கற்ப விருட்சமாய் நிறைந்த வித்தை.
(32)
+ கருந்துரோகம். * வாசனையிலாமல் நின்று வயங்குமவ் வாற தன்றோ.