நீதி சாரம்
127
-
(அ - ள்) அங்கியை அவித்து நெருப்பை அணைத்து; அவியாத சேடம் அணையாத மீதம்; நேரார் - பகைவர்; மங்கலில் அழிதல் இல்லாத.
-
பகைவரை அடுத்துக் கடமை புரிதல்
41. ஆதிநாட் பகைவர் தம்பால் அருங்கரு மங்கள் வேண்டில் நீதியாய் நிதான மாக நேயமாய்ச் சென்றால் ஆகும்
சோதியாங் கரும மானால் +தோய்ந்தமுற் பகையைத் தானே ஏதினால் தொடங்க லாமோ அப்படி இசைந்து கொள்க.
-
(40)
(அ - ள்) ஆதிநாள் பகைவர் பழமையான பகைவர்; அருங்கருமங்கள் - ஆகவேண்டிய அரிய காரியங்கள். வேண்டில் (ஆக) வேண்டுமானால்.நேயம் - அன்பு; சோதியாம் கருமம் விளக்கமான ஒரு காரியம்; தோய்ந்த -ஏற்பட்ட; ஏதினால் -
எவ்வகையால்
தீயர் குணம் மாறாது
(41)
42. இணங்கிடா மூர்க்க ருக்கிங் கெத்தனை விதஞ்சொன் னாலும் வணங்கித்துர்க் குணம்வி டார்கள் வளர்த்திடும் சுணங்க னுக்கு நிணங்கொள்பால் அன்னம் இட்டு நிறைந்தபொற் றொடரும்பூட்டி மணங்கொள்தண் டிகையில் வைத்துக் குலைத்தது கடிக்கும்
போலாம்.
-
-
-
(அ - ள்) வணங்கி - பணிந்து; துர்க்குணம் கெட்டகுணம்; சுணங்கன் - நாய் ; நிணம் - ஊன்; தொடர் சங்கிலி; தண்டிகை - பல்லக்கு, சிவிகை; குலைத்து - குரைத்து; அது கடிக்கும் போலாம் அந்நாய் கடிப்பது போன்றதாம்.
எவ்வெவற்றால் எவ்வெவை குறையும் எனல்
43. இகலிரு வருக்குண் டாகில் இருவரில் ஒருவர் அற்றால் பகையறும்; கோப மூண்டால் பணிந்திடில் அற்றுப் போகும்; மகவினைப் பெற்ற அன்றே மடமினார்க் கிளமை குன்றும்; புகன்றொரு வன்பாற் சென்றே யாசிக்கிற் பெருமை போகும்.
-
(42)
(அ -ள்) இகல் - பகை; அற்றால் இறந்தால்; மடமினார் (மடமின்னார்) - மெல்லியல் வாய்ந்த பெண்டிர்க்கு; குன்றும் -
- வர்த்திக்கும்.
சேர்ந்தமுற்.