உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

53

ட்டு என்பது திருப்பரங்குன்றத்துக் கல்வெட்டில் வருகிற குட்டு' என்பதாகும். இது கொடு என்னுஞ் சொல்லின் திரிபு. பாகனூர் என்பது மதுரைக்கு வடக்கே உள்ள பாகனூர்க் கூற்றம். லேனா என்பது பாலிமொழிச் சொல். லேனா என்பதன் பொருள் குகை என்பது. திரு.கே.பி. சுப்பிரமணிய அய்யர் படித்து விளக்கங் கூறுவது வருமாறு:2 1. குட்டு கொட்டுபிதாவான் உபாசா அன் உபாருவான்

2. குட்டு கொட்டால கு இதா தாவின் சேட்டு அதான் லேன்

3. பாகனூர் போதாதான் பிட்டான் இதாதாவெ லேன்.

முதல் வாக்கியத்தில் உள்ள உபாருவன் என்பது ஓர் ஆளினுடைய பெயர். உபாசகனான (பக்தனான) உபாருவான் இந்தக் குகையை வெட்டுவித்தான் என்பது இந்த வாக்கியத்தின் பொருள். அடுத்த வாக்கியத்தில் உள்ள ‘கொட்டு கொட்டாலகு' என்பது குகையை வெட்டி அமைக்கிறவன் என்னும் பொருள் உள்ளமு. இதாதாவின் சேட்டு அதான் என்பது ஓர் ஆளின் பெயர். கொத்திக் குகையை உண்டாக்குகிறவனாகிய இதாதாவின் என்பவனுடைய குகை என்பது இதன் பொருள். அடுத்த வாக்கியத்தில் உள்ள பாகனூர் என்பது பாண்டி நாட்டுப் பாகனூர்க் கூற்றத்தில் ஓர் ஊர். போதாதான் என்பதன் பொருள் தெரியவில்லை. பிட்டான் இதாதாவெ(ன்) என்பது ஓர் ஆளின் பெயர். பிட்டான் என்பது பட்டாரன் என்பதன் திரிபு. லேன் என்பதன் பொருள் குகை. பாகனூரில் இருக்கும் பிடான் இதாதாவெ என்பவனுடைய குகை என்பது இந்த வாக்கியத்தின் பொருள்.

பின் இரண்டு சொற்றொடர்களின் கடைசியில் இரண்டு குறிகள் உள்ளன. முதல் குறி சிறு வட்டமும் வட்டத்தின் மேலும் கீழும் இரண்டு கைகளும் உள்ளன. இஃது ஓம் என்பதைக் குறிக்கிறது. அதை அடுத்துச் சதுரமும் அதற்குள் குறுக்கு நெடுக்காக இரண்டு கோடுகளும் காணப்படுகின்றன. இவை சுவஸ்திகத்தின் அடையாளமாகும்.

3

திரு. சி. நாராயணராவ் வழக்கப்படி இவற்றைப் பிராகிருதமாக்கிப்

பிறகு சமற்கிருதப்படுத்தியும் பொருள் கூறுகிறார்.4

1. ‘குட்டு கொட்டு பிதா வானா உபாசா அவுவா ஊ பாட்டுவ’ (பிராகிருதம்)