உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. கொங்கர் புளியங்குளப் பிராமி எழுத்து

மதுரைக்குத் தென்மேற்கே ஒன்பதரைக் கல் தொலைவில் திருமங்கலம் சாலையில் கொங்கர் புளியங்குளம் என்னும் ஊர் இருக்கின்றது. இவ்வூரின் வடகிழக்கே தாழ்வான பாறைக்குன்றுகள் இருக்கின்றன. இக் குன்றுகள் ஒன்றில் இயற்கையாக அமைந்த ஒரு பொடலில் ஆறு சிறு குகைகள் உள்ளன. இந்தக் குகைகளிலே 33 கற்படுக்கைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு குகையிலே மூன்று பிராமிக் கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இக் கல்வெட்டு கள் 1910 ஆம் ஆண்டு கல்வெட்டுத் தொகுப்பில் 55, 56, 57 ஆம் எண்ணுள்ளவையாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

N

1

ts FGLASS

+ G F EU t t hk B LJ SHK COLE

نيا

அவற்றைப் படித்த அறிஞர்கள் வெவ்வேறு வகையாகப் படித்துப் பொருள் கூறியுள்ளனர். அவற்றைக் கூறுவோம். திரு. கிருட்டிணசாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.'

1. கு ட்டு கொ ட்டு பி நா வா னா ஊ பா சா அ னா (ஊ)

பா (ட்டு) வ

2. (கு) ட் (ஊ) கொ ட்டா லகு (ஈ) த தா வினா சே ட்டு

அ த (ஆ) னா லே னா

3. பா க னா ஊ ர பே த (ஆ) த (ஆ) னா பி ட்டா னா ஈத தா வெ

போ னா