உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

51

(எழுதினவன்) என்பது. மணிய் என்பது மணி. மணிக்கற்கள். இகர ஈற்றுச் சொல்லில் யகர மெய் சேர்ந்துள்ளது. வண்ணக்கன் வாணிகன் என்னும் பொருள் உள்ள சொல். மணிவண்ணக்கன் என்றால் மணிக்கல் (இரத்தினக்கல்) வாணிகன் என்பது பொருள். தேவன் சாத்தன் - இது மணி வாணிகனுடைய பெயர். வண்ணக்கன் என்பது பொன்னையும் மணிகளையும் பரிசோதிக்கிறவன். புதுக்கயத்து வண்ணக்கன் சம்பூர்கிழான், வடம வண்ணக்கன் தாமோதரன், வண்ணக்கன் சோமருங்குமரனார் என்னும் பெயர்களைச் சங்கச் செய்யுட்களில் காண்கிறோம்.

மணிக்கல்

வாணிகனாகிய தேவன் சாத்தன் (இந்தக் கல்வெட்டின்) எழுத்துக்களையும் எழுதினான் என்பது பொருள். எழுத்தும் என்பதில் உள்ள ‘உம்' இவன் இன்னும் எதையோ செய்தான் என்று கூறுகிறது. அது என்ன? குகையில் முனிவர் இருப்பதற்குக் கற்படுக்கையை அமைத்ததோடு அல்லாமல் அவனே இந்தக் கல்வெட்டின் எழுத்துக்களையும் எழுதினான் என்பது பொருள்.

அடிக் குறிப்புகள்

1. சுதேசமித்திரன் 1961 சூன் 4ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை வெளியீடு, ‘ஈரோடு அருகே பிராமி எழுத்துச் சாசனம் என்னும் தலைப்பு ‘ஈரோடுக்குப் பக்கத்தில் அரச்சலூர் மலையில் மே 26 ஆம் நாள் பிராமி எழுத்துச் சாசனம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அரச்சலூர் மலையிலே ஆண்டிப்பாறை என்னும் குகையிலே இந்தச் சாசனம் எழுதப்பட்டிருக்கிறது. மயிலை சீனி வேங்கடசாமியும் அவருடைய நண்பர்களான ஸ்ரீபால், வித்துவான்கள் இராசு, பச்சையப்பன், சென்னியப்பனும் இந்தச் சாசனத்தைத் தற்செயலாகக் கண்டு பிடித்தார்கள்.'

2. Annual Report on Indian Epigraphy 1961-62 P. 10

3. P. 67. Seminar on Inscriptions 1966.

4. Early South Indian Palaeography, P. 293-298.