உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-5

மணிக்கல் வாணிகனான தேவன் சாத்தன் (இந்த) எழு படுக்கைகளை (இருக்கைகளை) பண்ணுவித்தான் என்று பொருள் கூறியுள்ளார்.

திரு.டி.வி. மகாலிங்கம்

4

வ்வாறு படித்துப் படித்துப் பொருள்

கூறியுள்ளார். இவ்வெழுத்துக்களின் தொடக்கத்தில் உள்ள வட்டமும் அதனுள் உள்ள புள்ளியும் ‘சித்தம்” என்னும் சொல்லைக் குறிக்கிற அடையாளம் என்று கருதுகிறார்.

‘(சித்தம்) தித்தம் பூணதத்தான் மாறைய வண்ணக்கன் தேவன் சாத்தன்’. தித்தம் என்பது தீர்த்தம். புனிதம் என்னும் பொருள் உள்ளது. தத்தான் என்றிருப்பது தந்தான் என்றிருக்கவேண்டும். 'மாறைய' என்பது ஓர் ஊரின் பெயரைக் குறிக்கிறது. இது மாறை நாட்டைச் சேர்ந்த ஊர் என்பது பொருள். வண்ணக்கன் என்பது நாணயப் பரிசோதகன் என்னும் பொருள் உள்ளது. கடைசிக் சொற்கள், தேவன் சாத்தன் என்பவை.

மாறநாட்டு நாணயப் பரிசோதகனாகிய தேவன் சாத்தன் தூய்மை பெறுவதற்குத் தவம் செய்ய (இந்தப் படுக்கைகளைக்) கொடுத்தான் என்பது பொருள். இதை நாம் படித்துப் பொருள் காண்போம்.

முதலில் உள்ள வட்டமும் அதனுள் உள்ள புள்ளியும் ௭ என்னும் எழுத்தாகும். சாதாரணமாகப் புள்ளியிடப்படவேண்டிய எழுத்துக்கள் கல்வெட்டில் புள்ளியிடப்படுவது இல்லை. இந்த எகர எழுத்தில் புள்ளியிடப்பட்டிருக்கிறது. ‘எகர ஒகர மெய் புள்ளி பெறும்’ என்பது பழைய எழுத்திலக்கணம். இதில் புள்ளி யிட்டிருப்பதனால் இது எகரக் குற்றெழுத்து என்பது நன்றாகத் தெரிகிறது. பிராமி எகர எழுத்து முக்கோண வடிவமாக எழுதப்படுவது வழக்கம். முக்கோண வடிவம் காலப்போக்கில் வட்டவடிவமாக மாறிவிட்டது. இந்த எழுத்துக்களைக் கீழ்க் கண்டவாறு படிக்கலாம்:

எழுத்தும் புணருத்தான் மணிய் வணக்கன் தேவன் சாத்தன்.

எழுதுதும் என்றிருப்பது எழுத்தும் என்றிருக்கவேண்டும். புணருத்தான் என்பது பொருத்தினான் சேர்த்தான் என்னும் பொருள் உள்ள சொல். இது புணர்த்தான் என்றிருக்கவேண்டும். எழுத்தும் புணர்த்தான் என்பதன் பொருள். எழுத்தையும் சேர்த்தவன்