உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

ஆதன் ஆதன் கற்படுக்கையை அமைக்கக் கொடுத்த பொன்னின் மதிப்பு இவ்வளவு என்பது இதன் கருத்து.

இனி, அடுத்த சொற்றொடரைப் பார்ப்போம். இது 1910 ஆம் ஆண்டின் கல்வெட்டுத் தொகுப்பின் 71ஆம் எண்ணுள்ளது.

+

திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.5

‘ம (ஆ) த தி ரை கொ (பா) புவணிகனா'

திரு. நாராயண ராவ் பிராகிருதமாக்கிப் பிறகு சமற்கிருதம் ஆக்குகிறார்.6

'மாத்திரை கொ பாபு வாணி கானா?' (பிராகிருதம்)

'மாட்டாக் - கிருதே - பாபு வணிஜாம்?' (சமற்கிருதம்)

- -

கிராமங்களின் வாணிகர்களின் தலைவர்களால் மாட்டாகி சாத்துக்கு (வணிகக்குழுவுக்கு)க் கொடுத்த தானம் என்பது பொருள்.

7

திரு. டி.வி. மகாலிங்கம் படித்ததும் கூறும் பொருள் இவை. 'மாத்திரை கொபு புவணிகன்’ கொப்பு (பெண்கள் காதில் அணிகிற கொப்பு என்னும் நகை) வாணிகன் என்பது பொருள்.

இதை நாம் படித்துப் பொருள் காண்போம். இதன் மொழிகள் 'மாத்திரை கெ ஊபு வணிகன்' என்பது. மாத்திரை என்பது முன் வாக்கியத்தில் கூறப்பட்டது போலக் கொள்க. அதாவது மதுரை என்பதன் கொச்சைச் சொல். இதை மதுரை என்று படிக்க வேண்டும். ஐந்தாவது எழுத்து கெ. இதை கொ என்றும் படித்துள்ளனர். இந்த எழுத்து இங்குத் தேவையற்றுக் காணப்படுகிறது. ஐகார ஈற்றுச் சொல்லின் இறுதியில் ஈகாரம் இட்டு எழுதுவது அக்காலத்து மரபு. இவ்வாறு எழுதப்பட்டுள்ளதை வேறு பிராமி வாசகத்திலும் பார்க்கிறோம். மதுரை என்னும் சொல்லின் கடைசியில் எழுத வேண்டிய ஈகார எழுத்துக்கு ஈடாக இந்த கெ எழுத்தைக் கற்றச்சன் தவறாக எழுதியிருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. ஊபு என்பது உப்பு என்று படிக்க வேண்டும். இதுவும் கொச்சையாக எழுதப்பட்டிருக்கிறது. வாணிகன் என்பதன் பொருள் தெளிவாகத் தெரிகிறது. மதுரை உப்பு