உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

-

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

‘பைமிஸின் மித்தி’ இதை ஸம்மிஸின் என்றும் படிக்கலாம். மித்தி என்பது உறக்கம் என்னும் பொருள் உள்ளது. சைனருடைய சிறு தெய்வங்களில் ஒன்றான ஸங்க்கர் அல்லது மிதியா என்னும் தெய்வத்தின் பெயராகவும் இருக்கலாம். இஃது ஓர் ஆளின் பெயரைக் குறிக்கிறது. திரு. ஐ. மகாதேவன் 21

'ஸாப மிதா ஈன்...பாமித்தி' பிக்குணி....ஸாபமித்தாவினுடைய என்பது பொருள். இதன் மொழித்தொடரைப் பார்ப்போம்.

இது பௌத்தமதப் பெண்ணின் பெயர்போல் தோன்றுகிறது. ஸபமிதி என்பது சுபமிதி ஆக இருக்கலாமோ. சுதமதி என்னும் பௌத்தப் பெண் பெயர் மணிமேகலைக் காப்பியத்தில் கூறப்படுகிறது. இந்தப் பெயரின் சரியான வடிவம் தெரியவில்லை. இந்தப் பெயருடையவர் கற் படுக்கை அமைக்கப் பொன் கொடுத்திருக்கிறார் என்பது தெரிகிறது. அடுத்த கல்வெட்டு இது.

лб

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இதன் முதல் மூன்று எழுத்துக்களை விட்டுவிட்டு மற்ற எழுத்துக்களைப் படித்து 'வாணிகன் நெடுமலன்' என்று கூறுகிறார். இந்தப் பெயர் இந்தக் குகையில் வசித்திருந்த ஒருவருடைய பெயரைக் கூறுகிறது என்று எழுதுகிறார்.22 திரு.டி.வி.மகாலிங்கம் இதை ‘பணிதி வணிகன் நெடுமலன்’ என்று படித்து, ‘அழகுப் பொருள்களை விற்கும் வாணிகனாகிய நெடுமூலன் என்று பொருள் கூறுகிறார்.

23

திரு. ஐராவதம் மகாதேவன் இதை 'பானித வணிகன் நெடுமலன்' என்று படித்து சர்க்கரை வாணிகன் நெடும(ல்)லன்' என்று பொருள் கூறுகிறார்.24

இங்கு நாம் பொருள் காண்போம்.

‘பணித வணிகன் நெட்டு மூலன்' என்பது இதன் தொடர். பணித வணிகன் என்பதற்கு அழகுப் பொருள் விற்பவன் என்றும் சர்க்கரை வாணிகன் என்றும் டி.வி.மகாலிங்கமும், ஐ. மகாதேவனும் பொருள் கூறுகிறார்கள். சங்க காலத்தில் இந்தச் சொற்கள் வழங்கவில்லை.

னால், பளிதம் என்னும் சொல் வழங்கி வந்தது. ஆகவே இது