உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

வி

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

என்பதன் தொடக்கத்திம் இடைநடுவே ஒரு குறி உள்ளது. இந்தக் குறியை இவர்கள் எல்லோரும் பிராமி எழுத்து வி என்று தவறாகப் படித்துள்ளனர். வி என்று தவறாகக் கருதியதை அடுத்து, தொடரின் முதல் எழுத்தாகக் கொண்டு 'வயகன்' என்று படித்துள்ளனர். அது வி என்னும் எழுத்து அன்று. பொன்னின் அளவைக் குறிக்கும் குறியீடு, குறியீடுக்கு அருகில் மூன்று புள்ளி இருப்பதை இவர்கள் ஆழ்ந்து காணவில்லை.

இனி இதை நாம் படித்துப் பொருள் காண்போம்.

66

வி

'இயகன் கணதிகன்” என்பது இதன் மொழித்தொடர். இதில் முதற் சொல்லாகிய ‘இயகன்’ என்பது ககர ஒற்றெழுத்து விடுபட்டுள்ளது. இதன் சரியான தொடர் ‘இயக்கன்’ என்பது. இயக்கன் என்று ஒரு வகை இனத்தார் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் இருந்தார்கள் (இயக்க இனத்தார் இலங்கையிலும் இருந்தார்கள்) இயக்கன் என்பது யக்ஷன் என்றும் கூறப்படும். 'ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்' தன்னுடைய நண்பர்களில் இயக்கன் என்பவனையும் கூறுகிறான்.12 இந்தக் கல்வெட்டில் கூறப்படுகிற இயக்கன், இயக்கர் இனத்தைச் சேர்ந்தவன் என்று தெரிகிறான். இவனுடைய பெயரைக் கண்திகன் என்று கல்வெட்டு கூறுகிறது. (கண்திகன் என்பதைக் கண்திகள் என்றும் படிக்கலாம்.)

(அழகர்

மலைக்குகையில் முனிவர்கள் இருப்பதற்கு அமைக்கப்பட்ட கற்படுக்கைகளை அமைத்துக் கொடுத்தவர் களில்) இயக்கன் கண்திகனும் ஒருவன். அவன் அதற்காகச் செலவிட்ட பொன்னின் அளவை இறுதியில் உள்ள குறியினால் அறிகிறோம். இதன் மதிப்பு இவ்வளவு என்பது இப்போது தெரியவில்லை.

அடுத்துக் கல்வெட்டைப் பார்ப்போம்.3 இதனுடைய வரிவடிவம் எனக்குக் கிடைக்கவில்லை. இதைக் கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.1

1. 'கா ண க அத னா ம (ஓ) கனா அதனா அதானா திரு.

நாராயணராவ்,15

காணக அ தானா (பிராகிருதம்) 'கணகஸ்ய தானானீ (சமற்கிருதம்) கணக்கனுடைய தானம் என்பது பொருள்.