உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள் 89

திரு. எச். கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்:

ச (ா) ந தா ரி தா னா கொடுபி தோன

திரு. டி.வி. மகாலிங்கம் இவ்வாறு படித்துப் பொருள் கூறுகிறார்:3 ச(ா)நதரிதன கொட்டுபி தொன

திராவிடியில் இதை இவ்வாறு படிக்கலாம். சந்த ரிதன் கொட்டு பிதோன். சந்தரிதன் என்பவன் இதைக் கொடுத்தான் என்பது இதன் பொருள். திரு. ஐ. மகாதேவன் இதை இவ்வாறு படிக்கிறார்:

சாந்தாரி தன் கொடு பி தோன் சந்தாரிதன் இதைக் கொடுத்தான் என்பது இதன் பொருள். திரு. கே. வி. சுப்பிரமணிய அய்யர் இதை 'சான தாரிதான் கொட்டுபி தோன்' என்று படிக்கிறார். ஆனால் இவர் இன்னொரு சொற்றொடரையும் இதனோடு சேர்த்துப் படிக்கிறார். அது பொருத்தமாக இல்லை. திரு. நாராயணராவ் கூறுவதற்கும் இதற்கும் பொருத்தம் இல்லை. இதன் வாசகத்தை சாந் தாரிதன் கொடுபித்தோன் என்று படிக்கலாம். இந்தக் கற்படுக்கையைச் சாந்தாரிதன் என்பவன் கொடுத்தான் என்பது பொருள். 'கொடு பித்தோன்' என்று எழுதவேண்டியது 'கொட்டு பி தோன்' என்று எழுதப்பட்டுள்ளது. கு வை ட்டு என்றும் த்தோ என்பது என்பது தோ என்றும் தவறாக எழுதப்பட்டுள்ளன.

அரிட்டாபட்டி 6

அரிட்டாபட்டியில் உள்ள இன்னொரு கல்வெட்டு இது:

திரு. கிருட்டிண சாத்திரி இதை இவ்வாறு படித்துள்ளார்:

வௌ அ டை நி காமா தோ ர கொடி (ஒர)

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்: வெள் - அடை நிகாமதோர் கொடி ஓர்.