உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

கழுகுமலை

95

அரிட்டாபட்டியில் உள்ள குன்றுகளுக்குக் கழுகுமலை என்று பெயர் உண்டு. அரிட்டரும் இவருடைய சீடர்களும் இந்த மலைக்குக் க ழுகுமலை என்று பெயர் இட்டிருக்கவேண்டும். பௌத்த பிக்குகள் தாங்கள் தங்கியுள்ள மலைக்குகைகளுக்குக் கழுகுமலை என்று பெயர் இடுவது வழக்கம். பௌத்த மதத்தை உண்டாக்கின கௌதம புத்தர் உயிர் வாழ்ந்திருந்த காலத்தில், இராசக்கிருக நகரத்துக்கு அருகில் இருந்த கிஜ்ஜரகூடமலைக் குகையில் அடிக்கடி போய்த் தங்குவது வழக்கம். இந்த மலையில் கழுகுகள் இருந்தபடியால் அதற்கு கிஜ்ஜரகூடமலை என்று பெயர் இருந்தது (கிஜ்ஜரம் - கழுகு.)

பகவன் புத்தர் கிஜ்ஜரகூட மலையில் தங்கியிருந்ததை நினைவு வு கூர்ந்து அவருடைய மதத்தைச் சேர்ந்த பௌத்த பிக்குகள் தமிழ்நாட்டில் தாங்கள் தங்கியிருந்த மலைகளுக்குக் ‘கழுகுமலை என்று பெயரிட்டார்கள். செங்கற்பட்டுக்கு அருகிலுள்ள திருக்கழுக் குன்றமும் (கழுகுக் குன்றம் என்பது கழுக்குன்றம் என்று மருவிற்று) திருநெல்வேலிக்கு அருகில் உள்ள கழுகுமலையும் மதுரைக்கு அருகிலுள்ள அரிட்டாபட்டிக் கழுகுமலையும் பௌத்த மதத் தொடர்புடையவை. அக்காலத்தில் பௌத்த பிக்குகள் இந்த மலைகளில் தங்கியிருந்தபடியால் இந்த மலைகளுக்குக் கழுகுமலை என்று பெயராயிற்று. ஆகவே, அரிட்டாபட்டிக் கழுகுமலையில் காணப்படுகிற கற்படுக்கைகளும் பிராமி எழுத்துக்களும் பௌத்த சமயத் தொடர்புடையவை.

அரிட்டாபட்டிக் கழுகுமலைகளில் இயற்கையாக அமைந்துள்ள குகைகளிலே தெற்குக் குகையின் வாயிலுக்கு மேலே எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் அதற்கு அருகில் கீழ்புறக் குகையின் உட்புற வாயிலுக்கு மேலே எழுதப்பட்டுள்ள பிராமி எழுத்துக்களும் மிக முக்கியமானவை. இந்த இரண்டு கல்வெட்டெழுத்துக்களும் நெடுஞ் செழியன் என்னும் பாண்டியன் பெயரைக் கூறுகின்றன. தமிழ் நாட்டிலே பாண்டியன் பெயரைக் கூறுகிற மிகப் பழைய கல்வெட்டெழுத்து இதுவே.

நெடுங்காலமாக மறைந்து கிடந்த இந்தக் கல்வெட்டெழுத்து 1906 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.