உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைத் தமிழக வரலாறு - ஆவணம் பிராமி எழுத்துகள்-நடுகற்கள்

107

இதற்கு இவர் இவ்வாறு பொருள் கூறுகின்றார்: 'குன்றத்தூரில் வசிக்கிற உள்நாதன் கொடுத்த தானங்கள். பின் உள்ள சொற்கள் இந்தக் குகையில் வசித்தவருடைய பெயரைக் கூறுகின்றன.?

2

திரு. நாராயணராவ் இதை இவ்வாறு படித்துள்ளார்: 'இவகு-நாட்டு-தூ உட்டுயுள-பொதன-தானா

ஏரி ஆரிதானா அதாந்துவாயி ‘அ-ரட்ட-காயிபானா'

நாடு என்பது திராவிடச் சொல் அன்று; அது நட் என்னும் சமற்கிருத வேர்ச்சொல். போதனா என்பது புதரானாம் அல்லது பௌத்ரானாம் என்னும் சமற்கிருதச் சொல்லைச் சுட்டுகிறது. தான என்பது தானம் என்னும் சமற்கிருதச் சொல். ஏரி ஆரிதனா என்பது ஐராவதானாம் என்னும் சொல்லாகும். ரட்ட என்பது ராஷ்ட்ரம். காயிபானா என்பது காஸ்யபானாம் என்னும் சொல். இவ்வாறு விளக்கங் கூறி இதன் கருத்தையும் தெரிவிக்கிறார். அதாத்து வாயக ராஷ்ட்ரத்து இவது நாட்டிலிருந்து வந்தவர்களான காஸ்யபர்களின் ஐராவத குலத்தைச் சேர்ந்த உட்டுயுல் என்பரின் மக்கள் (அல்லது பேரன்கள்?) செய்த தானங்கள்.3

திரு. ஐராவதம் மகாதேவன் இதைப் படித்துக் கூறுவது இது: இவ குன்றதூர் உறையுள் நாதன் தான அரிதன்

அத்துவாயி அரிட்ட காயிபன்.

66

குன்ற(த்)தூர் (படுக்கையில் வசிக்கும்) நாதன் என்பவரின் படுக்கைகள் (இவற்றைச் செய்து கொடுத்தவர்) அரி அரிதன், அத்துவாயி, அரட்ட காயிபன்.4

திரு. டி.வி. மகாலிங்கம் அவர்கள், இவ்வாறு படித்து விளக்கமும் பொருளும் கூறுகிறார்:

'இவ குன்றதூ உறையுள் பாதந்தன் எரி அரிதன்

அதன் தூவயி அரிட்ட கோயிபன்'

இவகுன்றம் என்பது யானைமலை. இவம் என்னும் சமற்கிருதச் சொல் இபம் என்றாயிற்று. இந்த மலையின் பழைய பெயர் 'இவகுன்று' என்றிருக்கலாம். பதந்தன் என்பது பதந்த என்னும் பாலி மொழிச் சொல்.