உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 5.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 5

குழைவான தூம்பு செதுக்கப்பட்டிருக்கிறது. குகைக்கு வெளியிலும் கற்படுக்கைகள் செதுக்கப்பட்டுள்ளன. குகைக்குச் சற்றுத்தூரத்தில் நீர் ஊற்றுள்ள சுனையொன்று இருக்கிறது. குகை வாயிலின் மேலேயுள்ள பாறையில் நீண்ட பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 1906ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட இவ்வெழுத்துக்கள் அவ்வாண்டின் சாசனத் தொகுப்பில் 457 ஆம் எண்ணுள்ளதாக இந்தச் சாசனம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இவ்வெழுத்துக்களின் வரிவடிவம் இவை:

trofarke

இந்த எழுத்துக்களைப் படித்த அறிஞர்கள் இதற்கு வெவ்வேறு பொருள் கூறியுள்ளனர். இவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். திரு. கிருட்டிண சாத்திரி இவ்வாறு படித்துள்ளார்.

இ வ(ம்) ஜெனா டு தூ உடை யுள (பா)த்னதானா ஏரி

டு

அதாது வாயிஅரட்டம் ட்டகாயி பானா (ஆரிதனா)

இவ்வாறு படித்த இவர் கீழ்க்கண்டவாறு விளக்கங் கூறுகிறார்.

'இவம்ஜெநாடு' என்பது ஒரு நாட்டின்பெயர். உடையுஎன்பது உடையன் (தலைவன்) என்னும் பொருள் உள்ளது. ஏரி என்பது குளத்தைக் குறிக்கிறது. ஆரிதனா என்பது ஹரிதானா என்னும் சமற்கிருதச் சொல்லின் திரிபு. தாதுவாயி என்பது தந்துவாய என்னும் பிராகிருதச் சொல்லின் திரிபு. இதன் பொருள் துணி நெய்கிறவன்

என்பது.'

1

திரு. கே.வி. சுப்பிரமணிய அய்யர் இவ்வாறு படித்துள்ளார்;

இவ குன்றது உறை உள்நாதன் அ தான

ஏரி அநிதன் அத்துவாயி அரட்ட காயிபான்